டிராவிட் மகன் அணி வெற்றி.. 10வது இடத்தில் வந்து ஆர்சிபி வீரர் காட்டடி.. மகாராஜா டி20 டிராபி 2024

0
928
Maharaja

தற்போது உலகெங்கும் கிரிக்கெட் வாரியங்கள் தங்களுக்கு என டி20 லீக்குகளை நடத்துவது போலவே, இந்தியாவில் மாநில கிரிக்கெட் வாரியங்களும் தனிப்பட்ட டி20 லீக்குகளை நடத்துகின்றன. இன்று கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மகாராஜா டி20 லீக் தொடங்கியது.

இன்றைய இரண்டாவது போட்டியில் மைசூர் வாரியர்ஸ் மற்றும் சிவமோக்கா லயன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற சிவமோக்கா லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

மைசூர் வாரியர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கார்த்திக் 20 பந்துகளுக்கு 18, கார்த்திக்.சிஏ 8 பந்துகளுக்கு மூன்று ரன் எடுத்து வெளியேறினார்கள். மூன்றாவது இடத்தில் வந்த கேப்டன் கருண் நாயர் தாக்குப்பிடித்து 16 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் 9 பந்துகளில் 1 பவுண்டரி உடன் ஏழு ரன்கள் எடுத்து வெளியேறினார். பாட்டில் ஒன்பதாவது இடத்தில் வந்த கிருஷ்ணா கவுதம் 19 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்ட மிதவேக பந்துவீச்சு ஆல் ரவுண்டர் மனோஜ் பாண்டேஜ் பேட்டிங்கில் 10வது இடத்தில் வந்து வெறும் 16 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 46 நாட்கள் எடுத்தேன். இதனால் மைசூர் வாரியர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க : விராத் கேஎல்.ராகுல் வராங்க.. எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்ல.. ஒரு விஷயம் பிடிக்கல – சர்பராஸ் கான் பேட்டி

அடுத்து சிவமோக்கா லயன்ஸ் அணிக்கு மழையின் காரணமாக 9 ஓவர்களில் 88 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த அணியால் 9 ஓவர்கள் முடிவில் 80 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியாக மைசூர் வாரியர்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிவமோக்கா அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் அபினவ் மனோகர் ஒரு முனையில் நின்று ஆட்டம் இழக்காமல் 29 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து போராடினார். ஆனாலும் அவருடைய போராட்டம் வீணானது!

- Advertisement -