“என்னை விட என் தம்பிதான் நல்ல பேட்ஸ்மேன்” இந்திய அணிக்கு தேர்வான சர்ப்ராஸ் கான் பேட்டி

0
280
Sarfaraz

இந்திய கிரிக்கெட்டில் இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் சகோதரர்களான இருவரும் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரே நேரத்தில் இடம் பெற்று விளையாடி இருக்கிறார்கள்.

சகோதரர்கள் யாரும் சேர்ந்து விளையாடும் அளவுக்கு இந்திய கிரிக்கெட்டில் இல்லை. தற்பொழுது மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கான் மற்றும் அவரது தம்பி முஷீர் கான் இருவரும் இந்திய கிரிக்கெட்டில் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

சர்ப்ராஸ் கான் மும்பை மாநில அணிக்காக கடந்த இரண்டு மூன்று ரஞ்சி சீசன்களில் டன் கணக்கில் ரன்கள் குவித்துள்ளார். முச்சதம் வரை அடித்திருக்கிறார். சென்ற ஆண்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அந்த நாட்டில் விளையாடிய டெஸ்ட் தொடரிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமையவில்லை.

இதற்குப் பிறகு அவர் தொடர்ந்து காத்திருந்து இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் டெஸ்ட் முடிந்த பிறகு ஜடேஜா கேஎல்.ராகுல் காயம் அடைய இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 161 ரன்கள் இவர் அடித்தார். அதே நாளில் இவருடைய தம்பி முசீர் கான் அயர்லாந்து அணிக்கு எதிராக 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையில் 118 ரன்கள் அடித்தார்.

சர்ப்ராஸ் கான் தன்னுடைய தம்பி முசிர் கான் பற்றி கூறுகையில் “அவர் என்னைவிட சிறந்த பேட்ஸ்மேன். அவர் என் தம்பி என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை. சில நேரங்களில் பேட்டிங்கில் நான் கஷ்டப்படும் பொழுது, அவருடைய பேட்டிங் நிற்போம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து சரி செய்து கொள்வேன். அவருடைய மேனரிசம் மற்றும் பேட் ப்லோ மிக அதிகமாக இருக்கும். சில சமயங்களில் நான் அவருடன் சேர்ந்து பேட்டிங் செய்யும்பொழுது அவரைப் பார்த்து கற்றுக் கொள்கிறேன்.

- Advertisement -

நான் 300 பந்துகள் பயிற்சியில் பேட்டிங் செய்தால் அவரும் 300 பந்துகள் பேட்டிங் செய்வார். எங்கள் நடுவில் பிறந்த சகோதரர் மொயின் எங்களுக்கு பந்து வீசுவார். நாங்கள் இருவரும் கிரிக்கெட் வீரர்களாக இருப்பதால் அவர் தன்னை பயிற்சிக்கு மாற்றிக் கொண்டார்.

இதையும் படிங்க : “2வது டெஸ்டுக்கு இவர்கள் வேண்டாம்.. இந்த வீரரை மட்டும் கொண்டு வாங்க” – கும்ப்ளே இந்திய அணிக்கு யோசனை

முஷிர்கான் ரிவர்ஸ் ஸ்வீப் நன்றாக இருக்கும். என்னுடைய ஸ்வீப் நன்றாக இருக்கும். இது நான் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன். நாங்கள் இருவரும் மற்றவர் நன்றாக விளையாட வேண்டும் என விரும்புகிறோம். இப்போது அவர் பந்து வீசும் போதும் நான் பேட்டிங் செய்யும்போதும் நல்ல ஆரோக்கியமான போட்டி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.