“என் இதயம் வலிக்குது.. பாபருக்கு தைரியம் இருக்கா? கடவுளுக்குத்தான் தெரியும்” – சோயப் அக்தர் மிக வேதனையான பேச்சு!

0
3367
Akthar

பாகிஸ்தான் அணி நேற்று சென்னையில் ஆப்கானிஸ்தான அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய சச்சரவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் மீதும் பாகிஸ்தான் அணியின் மீதும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையான வார்த்தை போரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான அணியின் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் மற்றும் சோயப் மாலிக் போன்றவர்கள் மிகக் கடுமையாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருக்கும் குளறுபடிகளைப் பேசி வருகிறார்கள்.

மேலும் நேற்றைய போட்டி நடைபெறுவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயாப் அக்தர் ஆப்கானிஸ்தான் அணி குறித்து எச்சரிக்கையை பாகிஸ்தான் அணிக்கு கூறியிருந்தார். முதலில் பேட்டிங் செய்து 300க்கும் மேற்பட்ட ரன்களை குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தது போல் எதுவுமே நடக்காமல் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது அவரை மிகவும் வேதனை அடைய செய்திருக்கிறது. அது குறித்து அவர் மிகவும் வருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

சோயப் அக்தர் கூறும் பொழுது “நான் பாகிஸ்தானுக்காக விளையாடியவன். என் இதயத்தில் இப்பொழுது ரத்தம் வருகிறது. நான் எப்பொழுதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசக்கூடியவன். இப்பொழுது பாபரின் பக்கத்தில் நான் இருந்திருந்தால் கேப்டனாக அவரை உயர்த்த சொல்லி இருப்பேன். இப்போது நாங்கள் நான்கு ஆட்டங்களில் விளையாட வேண்டும். அந்த நான்கு ஆட்டங்களையும் நாங்கள் வெல்ல வேண்டும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது. சரி அதை விடுங்கள் ஆனால் பகார் ஜாமான் போன்ற வீரர்களை உள்ளே கொண்டு வந்து விளையாடுங்கள். தாக்கி விளையாடுவதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு கொடுங்கள். வேறு வழிகளை தேடி ஆக்ரோஷமாக விளையாடுங்கள்.

கேப்டன் பாபர் அசாமும் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். அவர் 120 ஸ்ட்ரைக் ரேட்டில் இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் அணியின் குர்பாஸ் அவ்வளவு ஸ்ட்ரைக் ரேட்டில்தான் விளையாடினார். 80, 90 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதால் எந்த பயனும் கிடையாது.

பாபருக்கு தைரியமும் சகிப்புத்தன்மையும் திறமையும் இருக்கிறதா? 1992ல் இம்ரான் கானை போல அவரால் சிறப்பாகச் செயல்பட முடியுமா? ஷாகின், வாசிம் அக்ரம் ஆக முடியுமா? ஹாரிஸ் ரவுப், அக்குப் ஜாவித் ஆக முடியுமா? சதாப் கானால் சக்லைன் முஸ்டாக் ஆக முடியுமா? இந்த அணியால் முடியுமா? ஆனால் நான் இந்த அணியை நம்புகிறேன். இவர்களால் செய்ய முடியுமா? கடவுளுக்குத்தான் தெரியும்!” என்று கூறியிருக்கிறார்.