நான் போட்ட உழைப்புக்கு விருதுகள் கிடைத்தது; ஆனால் டீம் தான் முக்கியம்.. 3 செஞ்சுரியும் 3 விதமாக அடித்தேன்.. மும்பையுடன் அடித்த செஞ்சுரி ஸ்பெஷல் – கண்ணீருடன் பேசிய சுப்மன் கில்!

0
3115

“நான் அடித்த மூன்று சதங்களும் மூன்று விதமாக அணுகியவை. அணி வெற்றிபெறாமல் போனது ஏமாற்றத்தை கொடுக்கிறது.” என்று பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார் சுப்மன் கில்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் மோதிய பைனல் பல்வேறு இழுபறிக்கு பிறகு நடைபெற்றது. பரபரப்பாக சென்ற ஆட்டத்தில், கடைசி ஓவர் கடைசி பந்து வரை சென்று சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைந்தது.

- Advertisement -

சீசன் முழுவதும் குஜராத் டைட்டன்ஸ் அணியினர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டனர். குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சில் முகமது சமி 28 விக்கெட்டுகள், ரசித் கான் 27 விக்கெட்டுகள், மோகித் சர்மா 27 விக்கெட்டுகள் என முதல் மூன்று இடங்களிலும் குஜராத் டைட்டன்ஸ் பவுலர்கள் இருக்கின்றனர் பேட்டிங்கில்.

அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார் சுப்மன் கில். இவர் ஐந்து அரைசதங்கள் மற்றும் மூன்று சதங்கள் உட்பட 17 போட்டிகளில் 890 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்திருக்கிறார். இறுதியில் ஆரஞ்சு தொப்பி, அதிக மதிப்பு மிக்க வீரர் விருது, போட்டியை மாற்றக்கூடிய கேம் செஞ்சர் விருது என முன்னணி விருதுகள் அனைத்தும் கில் வசம் சென்றது.

பல்வேறு விருதுகளை குவித்தாலும், இறுதியில் அவர் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வெல்ல முடியவில்லை என்கிற வருத்தம் கில் பேச்சில் தெரிந்தது. தனது பேட்டியில் கில் கூறியதாவது:

- Advertisement -

“விருதுகள் அனைத்தும் மிகுந்த அர்த்தமுள்ளவை. என்னுடைய கடின உழைப்பு சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இருப்பினும் பைனலை வெல்ல முடியாதது மிகப்பெரிய ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் கொடுக்கிறது.

அணிக்கு நல்ல துவக்கம் கொடுப்பது மிகவும் அவசியம். அந்த துவக்கம் எனக்கு கிடைத்தது. சீசன் ஆரம்பத்தில் 40-50 ரன்கள் அடித்து வந்தேன். இரண்டாம் பாதியில் கிடைத்த துவக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்றியதும் மகிழ்ச்சியை கொடுத்தது. மேலும் டெத் ஓவர்களுக்கு என்று என்னுடைய பேட்டிங் அணுகுமுறையை மாற்றினேன். அதன் பலனாகவே என்னால் கடைசி கட்டத்தில் சில சிக்ஸர்களை அடிக்க முடிகிறது.

இந்த சீசனில் நான் அடித்த மூன்று சதங்களும் மூன்று வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவை. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அடித்த சதம் போட்டியை என்னுடைய கன்ட்ரோலில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆடியபோது அடித்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான சதம் எந்த பவுலர்களை டார்கெட் செய்து அடிக்கலாம் என்று அணுகியபோது வந்தவை. ஒட்டுமொத்தமாக இந்த சீசன் எனக்கு நிறைய அனுபவங்களை கொடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நான் அடித்த சதம் ஸ்பெஷலான ஒன்று.” என்று பேட்டியை முடித்தார் கில்.