நடப்பு 2024 துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பி அணி பேட்ஸ்மேன் இளம் வீரர் முஷீர் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்டநாயகன் விருது பெற்ற முஷீர் கான் போட்டியில் செயல்பட்ட விதம் குறித்து பேட்டியளித்திருக்கிறார்.
இந்த போட்டி நடைபெற்ற பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்திருந்தது. இதன் காரணமாக இங்கு விளையாடிய சுப்மன் கில், கேஎல். ராகுல் போன்ற ஓரளவுக்கு நல்ல அனுபவம் பெற்ற வீரர்களே தடுமாறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முஷீர் கான் டெக்னிக்
இந்த போட்டியில் முஷீர் கான் இளம் வீரராக இருந்த பொழுதும் கூட வேதபந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ஒரு நல்ல டெக்னிக்கை பயன்படுத்தி விக்கெட்டை தற்காத்துக் கொண்டார். சுழல் பந்துவீச்சுக்கு இறங்கி வருவது போல, வேகப் பந்துவீச்சுக்கு எதிராக ஆப் ஸ்டெம்ப் லைனில் இறங்கி வந்து பந்தை தடுத்து விளையாடினார்.
இதன் காரணமாக வேகப்பந்துவீச்சாளர்களால் ஒரு குறிப்பிட்ட லைன் அண்ட் லென்த்தில் தங்களை செட்டில் செய்து கொண்டு வீச முடியவில்லை. இதனால் அவர்கள் தங்கள் திட்டத்தை மாற்ற வேண்டியதாக இருந்தது. இந்த நேரத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் கிடைத்ததும் அதிரடியாக விளையாடி தனக்கு தேவையான ரன்களை எடுத்தார். அவருடைய இந்த அணுகுமுறை மிகச் சிறப்பாக அமைந்தது.
ஆட்டநாயகன் விருதுக்கான காரணம்
நட்சத்திர இந்தியா பேட்ஸ்மேன்கள் தடுமாறிய ஆடுகளத்தில் இப்படி திறமையாக யோசித்து விளையாடியதோடு மிகப்பெரிய சதத்தை அடித்து 181 ரன்கள் எடுத்தார். இவரது சதமே அந்த அணி கடைசியாக 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற முஷீர் கான் பேசும்பொழுது “என் தந்தையுடன் சேர்ந்து நான் சிறந்த முறையில் தயாராகி இருந்தேன். இது எனக்கு பெரிய அளவில் உதவி செய்தது. நான் ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடியிருந்த காரணத்தினால் எனக்கு துலீப் டிராபியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க : லஞ்ச் வரைக்கும் அதையே பேசினோம்.. ஆனா முஷீர் கான் பெரிய வேலையா பார்த்துட்டார் – சுப்மன் கில் பேட்டி
மேலும் நவ்தீப் ஷைனி பாய் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்கும் பொழுது, நான் ஸ்ட்ரைக்கர் என்டில் இருந்து ஒவ்வொரு பந்துக்கும் அவருக்கு உத்வேகம் கொடுக்கும்படி நான் பேசினேன். மேலும் நான் ஷார்ட் லெக் பீல்டிங் பொசிஷனில் கேட்ச் எடுப்பது எனக்கு இது முதல் முறை அல்லது இரண்டாவது முறையாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.