நடப்பு துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி இந்திய பி அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்திய ஏ அணியின் கேப்டன் சுப்மன் கில் தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதி கொண்ட போட்டியில் நான்காவது நாளான இன்று இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்கள் எடுத்து 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய பி அணியிடம் தோன்றியடைந்தது. பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கேப்டன் கில் ஏமாற்றம் தந்தார்.
முதல் இன்னிங்ஸில் முஷீர் கான்
இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி அணி 94 ரன்களில் ஏழு முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனவே 150 ரன்களை எட்டுமா என்பதை பெரிய சந்தேகமான சூழ்நிலை இருந்தது.
இப்படியான நிலையில் முஷீர் கான் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி உடன் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக அணியை மீட்டெடுக்க ஆரம்பித்தார். இறுதியில் சிறப்பாக விளையாடிய அவர் சதமும் அடித்தார். மேற்கொண்டு தொடர்ந்து விளையாடி 373 பந்துகளில் 16 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உடன் 181 ரன்கள் குவித்தார். மேலும் இந்த ஜோடி 43 பந்துகளில் 205 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதனால் இந்தியா பி அணி 321 ரன்கள் குவித்தது.
பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் முஷீர் கான் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் முறையை அச்சு அசலாக பின்பற்றி பெரிய சதம் அடித்தது ஆச்சரியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் அவர் குவித்த ரன்னே வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இந்தியா பி அணிக்கு அமைந்தது. எனவே அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
தோல்விக்கான காரணங்கள்
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கும் கேப்டன் சுப்மன் கில் “முஷீர் கான் மற்றும் சைனி இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். எங்களுக்கு எங்களுக்கு விக்கெட்டில் பெரிய உதவி கிடைக்காத நேரத்தில் சைனிக்கு எதிராக நாங்கள் பவுன்ஸ் திட்டத்தை கையில் சீக்கிரமே எடுத்து இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : 76 ரன்.. சுப்மன் கில் மீண்டும் ஏமாற்ற.. ரிஷப் பண்ட் அணி வெற்றி.. பவுலிங் பேட்டிங் ஆகாஷ் தீப் கலக்கல்
போட்டியை திரும்பி பார்க்கும் பொழுது இப்படி ஏதாவது நமக்கு தோன்றும். ஆனால் நாங்கள் அந்த சூழ்நிலையில் எது சரியாக இருக்குமோ அந்த சிறந்ததையே செய்தோம். இரண்டாவது இன்னிங்ஸில் நாங்கள் பந்து வீசிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.மேலும் இந்தப் போட்டியில் எங்களுக்கு ஒரு நூறு ரன் பார்ட்னர்ஷிப் கிடைத்தால் வென்று விடுவோம் என்று மதிய உணவு இடைவேளை வரையில் பேசிக் கொண்டிருந்தோம்” என்று கூறியிருக்கிறார்.