சூரியவன்சி திறமை லாராவுக்கு இருந்திருந்தா சந்தோஷப்பட்டு இருப்பார்.. இந்த பையன் உள்ளுக்குள்ள யாரையும் மதிக்கிறது இல்லை – முரளி கார்த்திக் பேட்டி

0
18
Vaibhav

இந்திய உள்நாட்டு இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியின் திறமை லாராவுக்கு இருந்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என முரளி கார்த்தி கூறியிருக்கிறார்.

நேற்று இந்த ஐபிஎல் தொடரில் முதல் நானூறு ரண்களை வைபவ் சூரியவன்சி எடுத்தார். இதற்கு அவருக்கு மொத்தமாக தேவைப்பட்டது வெறும் 167 பந்துகள் மட்டுமே. ஒரு ஐபிஎல் சீசனில் குறைந்த பந்துகளில் 400 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

சிக்ஸர் அடிக்கும் திறமை

இதுநாள் வரையிலான கிரிக்கெட்டில் 15 வயதான வைபவ் சூர்யவன்சி போல சிக்ஸர் அடிக்கும் திறமை கொண்ட வீரர் இல்லை என்பது பெரிய ஆச்சரிய நிகழ்வாக இருக்கிறது. அவர் பந்தை சரியான திசைகளில் மிகவும் துல்லியமாக ஆனால் சாதாரணமாக அடிக்கிறார்.

இதுவரையில் அவர் சந்தித்த எல்லா உலகத் தரமான பெரிய பவுலர்களையும் சிக்ஸருக்கு அடித்திருக்கிறார். பல பெரிய பேட்ஸ்மேன்கள் அஞ்சும் பும்ராவை வெகு சாதாரணமாக அடித்திருக்கிறார். இவர் கிரிக்கெட்டில் ஒரு அதிசய குழந்தை என பலரும் கூறுகிறார்கள்.

- Advertisement -

லாரா மகிழ்ச்சி அடைந்திருப்பார்

இதுகுறித்து முரளி கார்த்திக் பேசும்போது “சூரியவன்சியின் அதிரடி பேட்டிங் திறமை லாராவுக்கு கிடைத்திருந்தால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அவர் ஒரு மேதை. அவரும் பேட்டை மேலே தூக்கிப் பிடித்திருப்பார். ஆனால் சூரியவன்சி பேட்டை கீழே கொண்டு வரும் பொழுது அதிக சக்தியை உருவாக்குகிறார். அவருடைய தலையும் அசையாமல் இருக்கிறது. அவருடைய ஷாட் தங்குதடையில்லாமல் ஆடம்பரமாக இருப்பதில்லை. ஆனால் பந்தை பலமாக தாக்குகிறார்”

இதையும் படிங்க: 222 ரன் சாதாரணமானது கிடையாது.. உடம்பு ரொம்ப டயர்டு ஆயிடுச்சு.. ஆனா தோல்விக்கு காரணம் இதுதான் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி

“மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் மிகவும் இளமையானவர். எனவே கண் மற்றும் கை ஒருங்கிணைப்பு அற்புதமாக உள்ளது. மேலும் இவர் சேவாக் போல தைரியமான குணம் கொண்டவர். பெரிய பவுலர்களை பார்த்தால் சேவாக் பெரிய அளவில் அடிக்க விரும்புவார். இந்த இளைஞனும் இதை வெளியில் சொல்வது கிடையாது. ஆனால் உள்ளுக்குள் பெரிய பவுலர்கள் எல்லோரையும் அடித்து நொறுக்குவேன் என்று சொல்லிக் கொள்கிறார்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -