ஐபிஎல் 2025

ஹர்திக் பாண்டியாவின் இந்த மோசமான செயலை.. ஆரம்பித்து வைத்ததே தோனிதான் – முரளி கார்த்திக் விமர்சனம்

நேற்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இறுதி ஓவரில் நடந்து கொண்ட விதம் சரியானது கிடையாது என இந்திய முன்னாள் வீரர் முரளி கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் வலிமையான அணியாக கணிக்கப்பட்டது. மேலும் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் விளையாடிய முதல் நான்கு போட்டியில் மூன்று போட்டிகளை தோற்று அதிர்ச்சி அளித்திருக்கிறது.

கடைசி ஓவரில் நடைபெற்ற சம்பவம்

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் 19ஆவது ஓவரையில் லக்னோ அணியின் சர்துல் தாக்கூர் வீசினார். அதில் முதல் ஐந்து பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே வந்தது. இதைத்தொடர்ந்து திலக் வர்மாவுக்கு பதிலாக ரிடைர்ய்டு அவுட் முறையில் சான்ட்னர் கொண்டுவரப்பட்டது பெரிய ஆச்சரியத்தை உருவாக்கியது. அவர் 19வது ஓவரின் கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஆவேஷ் கான் வீசிய இருபதாவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த ஹர்திக் பாண்டியா மேலும் அந்த ஓவரில் சிங்கிள் ரன் எடுக்க மறுத்துவிட்டார். தொடர்ந்து ஆறு பந்துகளையும் சந்தித்த அவரால் வெற்றிக்கு தேவையான ரன்களை அடிக்க முடியவில்லை. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் முரளி கார்த்திக் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இதை ஆரம்பித்து வைத்தது தோனிதான்

இது குறித்து முரளி கார்த்திக் பேசும்பொழுது “மும்பை அணி என்ன செய்ய முயல்கிறது என்று எனக்கு புரியவில்லை. திலக் வர்மாவுக்கு நல்ல நாள் இல்லை என்ன உணர்ந்து நீங்கள் சான்ட்னரை அழைத்து வந்தீர்கள். அவர் கடைசியாக அந்த ஒரு பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார். அவர் பெரிய ஷாட் விளையாடுவார் என்ற நம்பிக்கையில் நீங்கள் அழைத்து வந்தீர்கள் என்றால், கடைசி ஓவரில் நீங்கள் ஏன் அவருக்கு சிங்கிள் கொடுக்கவில்லை. ஹர்திக் பாண்டியா அதை செய்திருந்தால், ஒருவேளை சான்ட்னர் பெரிய சிக்ஸர்கள் கூட அடித்திருக்கலாம் இல்லையா?!”

இதையும் படிங்க : நீங்க திருந்தவே மாட்டீங்களா.. 2வது முறையாக தண்டனை.. ரிஷப் பண்டும் சேர்ந்து சிக்கினார் – வெளியான தகவல்கள்

“இப்படி கடைசி கட்டத்தில் சிங்கிள்ஸ் எடுப்பதை தோனி முதலில் மறுத்து தானே விளையாட ஆரம்பித்தார் என்று நான் நினைக்கிறேன். அவர் ஆரம்பித்து வைத்த பிறகு பலர் இதை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இது சரியான போக்கு கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts