நீங்க திருந்தவே மாட்டீங்களா.. 2வது முறையாக தண்டனை.. ரிஷப் பண்டும் சேர்ந்து சிக்கினார் – வெளியான தகவல்கள்

0
128
Digvesh

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ பவுலர் திக்வேஷ் சிங்குக்கு இரண்டாவது முறையாக பிசிசிஐ அபராதம் விதித்திருக்கிறது. மேலும் ரிஷப் பண்டுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி சிறப்பான முறையில் விளையாடி 203 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மிட்சல் மார்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் இருவரும் அபாரமாக விளையாடி அரைத்ததம் அடித்து பெரிய ஸ்கோர் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.

- Advertisement -

திக்வேஷ் சிங் அபாரம்

இதைத்தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 191 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் லக்னோ பந்துவீச்சில் திக்வேஷ் சிங் நான்கு ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் கைப்பற்றி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இவரது அதிரடியான பந்துவீச்சின் காரணமாக லக்னோ அணி பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது.

இந்த நிலையில் இதற்கு முன்பு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பிரியன்ஸ் ஆர்யாவுக்கு நோட் புக் செலிப்ரேஷன் செய்ததற்காக இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் நமன் திர் விக்கெட்டை கைப்பற்றி அதே முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மீண்டும் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐ 2 அபராதங்கள்

இது குறித்து பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கும் பொழுது ” நேற்று போட்டியின் 16வது ஓவரின் போது குறிப்பிட்ட நேரத்திற்கு சரியான ஓவர்களை லக்னோ அணி வீசி முடித்திருக்கவில்லை. ஐபிஎல் நடத்தை விதி 2.22ன் கீழ் லக்னோ அணிசெய்த முதல் குற்றமாக இருக்கிறது. இதன் காரணமாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது”

இதையும் படிங்க : 42 ஓவர்.. பாகிஸ்தான் பரிதாப ஒயிட் வாஷ்.. நியூசிலாந்து சி டீம் கலக்கல் வெற்றி.. தொடரை வென்றது

“திக்வேஷ் சிங் நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக இரண்டாவது லெவல் குற்றத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இது ஆர்டிகள் 2.5 இன் கீழ் குற்றமாகப்படுகிறது. எனவே அவரது போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்துடன் ஏற்கனவே ஒழுக்க நடைமுறையில் ஒரு புள்ளியை அவர் இழந்திருந்தார். தற்போது அவர் இன்னொரு புள்ளியையும் இழக்கிறார்” என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -