இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மூன்று போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான முனாப் பட்டேல் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி ரோஹித் சர்மாவும் சேர்ந்த கலவை இவர் என்று இந்திய வீரரை பாராட்டி பேசி இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி t20 கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. உள்நாடு வெளிநாடு என எந்த நாட்டிலும் பாரபட்சமின்றி தனது அதிரடி ஆட்டத்தின் மூலமாக எதிரணிகளை துவம்சம் செய்து வருகிறது. மேலும் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் தொடரையும் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
20 போட்டிகளாக பார்ம் இன்றி தவித்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்த தொடரின் மூலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரும் பார்முக்கு வந்து விட்டார். எனவே இந்திய அணி தற்போது அனைத்து துறைகளிலும் வலுவானதாக விளங்குகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கலந்த கலவையாக இருக்கிறார் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முனாப் பட்டேல் புகழாரம் சூட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பாருங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை எண்ணுவது போல டி20 கிரிக்கெட்டில் நிச்சயம் சூரியகுமார் யாதவ் தான். நாங்கள் எப்போதுமே இது போன்ற பெரிய வீரர்களை நிர்வகிக்கிறோம். நீங்கள் எல்லாவற்றையும் இழக்கும் போது தான் ஒரு வீரர் கைவிடப்படுகிறார். ஆனால் நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறும் போது ஒரு சில விஷயங்கள் மறைக்கப்படுகின்றன. சூரிய குமாருக்கு வாய்ப்பு கிடைக்க உங்களுக்கு இது ஒரு வாய்ப்பாகும்.
நீங்க ஜெயிக்கிறீங்க, அதனால எந்த பிரச்சனையும் கிடையாது. ஒருவேளை நீங்க தோத்துட்டு இருந்தா அது தான் பெரிய பிரச்சனையாக இருக்கும். இந்த பார்மெட்ல சூர்யா ஒரு ஜாம்பவான் வீரர். அதனால அவருக்கான ஆதரவை தொடர்ந்து கொடுக்கணும். சூர்யா, ரோஹித் மாதிரி எல்லாவற்றையும் மறக்க வைத்து ஒரு இன்னிங்ஸ் விளையாட அவரால் முடியும். அவர் அதற்கு மிகவும் தகுதியானவர்” என்று பேசி இருக்கிறார்.






