உலக கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக மிகச் சிறந்த வீரராகவும், இயற்கையாவே பேட்டிங் திறமை கொண்ட வீரராகவும் இருவரை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்திருக்கிறார்.
ரிக்கி பாண்டிங் விளையாடிய காலகட்டத்தில் இருந்து தற்போது வரையில் சிறந்த பேட்ஸ்மேன்களில் பலராலும் முதல் இடத்தில் வைக்கப்படக்கூடியவராக சச்சின் இருந்து வருகிறார். பிறகு சச்சினின் சாதனைகளை உடைத்துக் கொண்டு வரும் விராட் கோலி இருக்கிறார். ஆனால் இவர்களை ரிக்கி பாண்டிங் புறக்கணித்திருக்கிறார்.
ரிக்கி பாண்டிங் பார்வை
ரிக்கி பாண்டிங் பேட்ஸ்மேன் பந்துவீச்சாளர் என்று மற்றும் பார்க்காமல் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் களத்தில் மிக அபூர்வ திறமைகளை கொண்டு செயல்பட்டு இருக்கும் வீரரை கிரிக்கெட்டின் சிறந்த வீரராக கருதுகிறார். இந்த வகையில் அவர் தன்னையும் அந்த பட்டியலில் இணைத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிறவி பேட்ஸ்மேன் என்று அழைக்கக்கூடிய வகையில் இயல்பாகவே பேட்டிங் செய்யும் திறமை கொண்ட வீரராக ஒருவரை ரிக்கி பாண்டிங் தேர்வு செய்து இருக்கிறார். குறிப்பாக சச்சின் டெண்டுல்கரை பிறவி பேட்ஸ்மேன் என அழைப்பார்கள். ஆனால் ரிக்கி பாண்டிங் இந்த வகைக்கும் சச்சினை புறக்கணித்து இருக்கிறார்.
நான் சொல்வது சிறந்த கிரிக்கெட் வீரரை
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் போகும்போது “ஜாக் காலிஸ்! நான் பார்த்த ஆல்ரவுண்ட் கிரிக்கெட் திறமையின் காரணமாக சிறந்த வீரர் என்று அவரைக் கூறுவேன். நான் திறமையான ஒரு பேட்ஸ்மேன் பற்றி பேசவில்லை. நான் திறமையான ஒரு கிரிக்கெட் வீரரை பற்றி பேசுகிறேன். அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 44 அல்லது 45 சதங்கள் அடித்து இருக்கிறார்”
இதையும் படிங்க : 1000 நாட்கள் மேல ஆயிடுச்சு.. பாகிஸ்தான் கிரிக்கெட் சரிவுக்கு இதுதான் காரணம் – அஸ்வின் கருத்து
“மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பவுலராக 300க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்ப முடியாத வகையில் அவருடைய கேட்ச் எண்ணிக்கையும் இருக்கும்.ஆனால் பலரும் சிறந்த வீரர்களை பற்றி பேசும்பொழுது இவர் குறித்து பேசுவதில்லை. ஆனால் என் பார்வையில் இவர்தான் சிறந்த திறமையான கிரிக்கெட்டர். மேலும் இயற்கையாகவே பேட்டிங் திறமை கொண்டவர் என்றால் அது பிரையன் லாரா என்று கூறுவேன்” என தெரிவித்திருக்கிறார்.