சிஎஸ்கே 5 வீரர்கள் தக்கவைப்பு.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்.. தோனிக்கு ஸ்பெஷல் கேட்டகிரி.. வெளியான அறிவிப்பு

0
613
Dhoni

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்க வைத்திருக்கிறது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைக்கும் நான்காவதாக அன்கேப்டு பிளேயர் லிஸ்டில் தோனியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது கூடுதலாக ஒரு வீரவையும் தக்க வைத்திருக்கிறது.

இன்று 10 அணிகளும் வீரர்களை தக்க வைப்பதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான கடைசி நாளாக இருந்தது. இந்த நிலையில் 10 அணிகளும் தங்களின் தக்கவைப்பு விபரத்தை வெளியிட்டு இருக்கின்றன. இதில் இரண்டாவது அணியாக சிஎஸ்கே அணியின் தக்கவைப்பு வீரர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே எதிர்பார்க்காத முடிவு

சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜா ருதுராஜ் மற்றும் பதிரனா மூவரையும் தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அன்கேப்ட்டு பிளேயர் லிஸ்டில் தோனியை நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைக்கும் என்றும் உறுதியாக நம்பப்பட்டது.

இப்படியான நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஐந்தாவது வீரராக சிவம் துபேவையும் தக்க வைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. தோனியை அன் கேப்ட்டு பிளேயர் லிஸ்டில் வைத்துக் கொண்டு, மீதம் நால்வரை தக்க வைத்திருக்கிறது.

- Advertisement -

இனிவரும் மெகா ஏலங்களில் இந்திய வீரர்களாக இருந்தாலும் ஆறு வீரர்களை தக்க வைப்பதற்கான முறை தொடர்ந்து இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவேஇந்திய வீரர்களை தக்க வைப்பதில் எல்லா அணிகளுமே ஆர்வம் காட்டி வருகின்றன.

சிஎஸ்கே தக்கவைப்புவீரர்களின் விலை

சிஎஸ்கே அணி முதல் வீரராக கேப்டன் ருதுராஜை 18 கோடி ரூபாய்க்கும், இரண்டாவது வீரராக பதிரனாவை 13 கோடி ரூபாய்க்கும், மூன்றாவது வீரராக சிவம் துபேவை 11 கோடி ரூபாய்க்கும், நான்காவது வீரராக ரவீந்திர ஜடேஜாவை 18 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்திருக்கிறது. இதில் சீனியர் வீரர் என்கின்ற காரணத்தினால் ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன் ருதுராஜுக்கு தந்த அதே தொகையை நிர்ணயித்து அணியில் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க : 273 ரன் வித்தியாசம்.. பங்களாதேஷ் அணியை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.. இந்திய அணிக்கு கடும் நெருக்கடி

மேலும் ஐந்தாவது வீரராக மகேந்திர சிங் தோனியை அன்கேப்டு பிளேயர் லிஸ்டில் நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்திருக்கிறது. தற்போது சிஎஸ்கே அணி மொத்தம் 120 கோடி ரூபாயில் 69 கோடி செலவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணியின் கையில் தற்பொழுது 51 கோடி ரூபாய் மீதம் இருக்கிறது. எனவே மெகா ஏலத்தில் ஆரம்ப நிலையில் அதிரடியாக செல்ல முடியாது!

- Advertisement -