டிஎன்பிஎல் பாணியில் மும்பையில் நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய அணியிலிருந்து நீண்ட காலமாக நீக்கப்பட்டு இருக்கும் பிரித்வி ஷா அபாரமாக விளையாடி தரமான சம்பவம் ஒன்றை கொடுத்திருக்கின்றார். சூர்யகுமார் தலைமையிலான Triumph knights அணிக்கு எதிராக மும்பை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது.
இதில் பிரித்விஷா தொடக்க வீரராக களம் இறங்கி ஒரே ஓவரில் தொடர்ந்து 6 பவுண்டரிகளை அடித்து இருக்கின்றார். இதன் மூலம் 34 பந்துகளில் அவர் 75 ரன்கள் விளாசி இருக்கிறார். இதில் 12 பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். பிரித்விஷா அண்மையில் மும்பை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
வாய்ப்பு வழங்கிய மும்பை டி20:
பிரித்விஷா உடல் தகுதி இல்லாமல் இருக்கிறார் என்றும், அவருக்கு கிரிக்கெட் மீதான கவனம் சிதறிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் பல வீரர்களும் பிரித்விஷாவுக்கு அறிவுரை வழங்கி மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த தருணத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கூட பிரித்விஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
பல வீரர்கள் காயம் அடைந்த நிலையில் மாற்றுவீரராக கூட பிரித்விஷாவால் அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த பிரித்வி ஷா,மும்பை டி20 தொடரில் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். மும்பை பாந்தர்ஸ் அணியில் தொடக்க வீரராக விளையாடி அவர் அதிரடி காட்டி இருக்கிறார்.
ஒரே ஓவரில் 6 பவுண்டரி:
பவர் பிளேவை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர் பவுண்டரி,சிக்சர் என மிரட்டி இருக்கிறார். நான்காவது ஓவரை விளையாடிய அவர் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளை விரட்டி 19 ரன்களை குவித்தார். இதை அடுத்து ஐந்தாவது ஓவரில் மினாட் மஞ்சுரேக்கர் வீசிய ஓவரில் ஐந்து பவுண்டரி ஒரு சிக்சர்களை அடித்து 26 ரன்களை சேர்த்தார்.தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 34 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார்.
இதையும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு வரும் சஞ்சு சாம்சன்.. சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு.. ரசிகர்கள் மகிழ்ச்சி
இதில் 12 பவுண்டரிகளும், மூன்று சிக்சர்களும் அடங்கும். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 220 என்ற ரன்களை
இருந்தது. அவருக்கு அடுத்தது ஹர்சல் ஜாதவ் என்ற வீரர் 30 பந்துகளில் 46 ரன்கள் எடுக்க மும்பை பாந்தர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ட்ரம்ப்ஸ் நைட் அணி 19.5 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் சூரியகுமார் 16 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து ரசிகர்களை ஏமாற்றினார்.






