சிஎஸ்கே அணிக்கு வரும் சஞ்சு சாம்சன்.. சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவு.. ரசிகர்கள் மகிழ்ச்சி

0
165

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கிய சஞ்சு சாம்சனுக்கு போதாத காலமாக இருந்தது. சஞ்சு சாம்சன் காயம் அடைந்ததன் காரணமாக அவர் வெறும் பேட்ஸ்மேன் ஆக மட்டும்தான் களமிறங்கினார்.

இதன் காரணமாக கேப்டனாக ரியான் பராக் செயல்பட்டார்.சஞ்சு சாம்சன் தன் உடல் தகுதியை நிரூபித்தும், சில போட்டிகளுக்கு பிறகு தான் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதுவரை இம்பாக்ட வீரராக மட்டுமே களமிறங்கினார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் 9 போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் 285 ரன்கள் அடித்திருந்தார்.

- Advertisement -

நேரம் வந்துவிட்டது:

இதில் ஒரு அரை சதம் அடங்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் சஞ்சு சாம்சனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு சஞ்சு சாம்சன், சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டு இருப்பது வைரலாகி வருகிறது.

அதில்,” கடந்து செல்வதற்கான நேரம் வந்துவிட்டது” என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் அணியில் இருந்து செல்வதையே  சாம்சன் மறைமுகமாக பதிவிட்டு இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

சிஎஸ்கே, தமிழ்நாடு அணிக்கு வருகிறாரா?:

ஒருவேளை சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறினால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுக்க தயாராக இருக்கிறது. தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு சரியான தேர்வாக சாம்சன் இருப்பார் என்று ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இதே போன்று சஞ்சு சாம்சனுக்கு கேரள கிரிக்கெட் அணிக்கும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: ரோகித்துக்கு அவ்வளவு வொர்த் இல்ல.. தயவு செய்து அப்படி பேசாதீங்க.. கோலி ரசிகர்களுக்கு தீனி போட்ட சஞ்சய் மஞ்சுரேக்கர்

விஜய் ஹசாரே தொடரில் சேர்க்கப்படாததால், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் சாம்சனின்  தந்தை கேரள கிரிக்கெட் நிர்வாகிகளை கடுமையாக திட்டியதால்,அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.இதன் காரணமாக சாம்சன் கேரள கிரிக்கெட் அணியில் இருந்து விலகி தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக விளையாட போகிறார் என்ற செய்தியும் வந்துள்ளது. இதையெல்லாம் காரணமாக வைத்து தான் சஞ்சு சாம்சன் இவ்வாறு பதிவிட்டு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

- Advertisement -