இந்திய அணியில் அஸ்வின் இடத்துக்கு.. இணைய இருக்கும் புதிய வீரர் யார்?.. வெளியான தகவல்கள்

0
852
Ashwin

இந்திய டெஸ்ட் அணியில் திடீரென ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் உடைய இடத்திற்கு மும்பை மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் வீரர் இடம்பெற இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

தற்போது இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவில் திடீரென ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு முடிவை அறிவித்தார். அத்துடன் அவர் அணியை விட்டு வெளியேறி வந்துவிட்டார்.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தருக்கான வாய்ப்பு

தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தில் விளையாட வைப்பதற்கு வாஷிங்டன் சுந்தர் இருக்கிறார். நிச்சயம் நியூசிலாந்து தொடரில் சாதித்த அவருக்கே ரவிச்சந்திரன் அஸ்வினின் இடம் கொடுக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தத் தொடரில் இரண்டு ஆப் ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். எனவே தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்துக்கு ஒரு பேக்கப் ஆப் ஸ்பின்னர் தேவையாக இருக்கிறார். இந்த இடத்திற்கு மும்பை மாநில அணிக்காகவும் இந்த ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் இணைந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடியவருமான ஆப் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியன் இந்திய அணியில் இணைய இருக்கிறார் என்று செய்திகள் கூறுகிறது.

- Advertisement -

யார் இந்த தனுஷ் கோட்டியன்?

தற்போது அஸ்வின் இடத்திற்கு தேர்வு செய்யப்பட இருக்கும் 26 வயதான ஆப் ஸ்பின்னர் தனுஷ் கோட்டியன் மும்பை மாநில அணிக்காக விளையாடுகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அஸ்வின் உடன் இணைந்தும் விளையாடு இருந்தார். மேலும் மும்பை மாநில அணி இந்த ஆண்டு ரஞ்சி கோப்பையை கைப்பற்றுவதற்கு பந்துவீச்சில் மட்டும் இல்லாது பேட்டிங்கிலும் முக்கிய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஐசிசி-யை விட பிசிசிஐ தான் சக்தி வாய்ந்தது.. பின்வாங்கிய ஸ்மித்.. பயப்படாத ஹெட்.. ஆஸி வீரர்கள் கருத்து

இவர் மொத்தம் 33 முதல் தர போட்டிகளில் 59 இன்னிங்ஸ்கள் விளையாடி 101 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் 47 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்து 1525 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 2 சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் அஸ்வின் போலவே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் செயல்படக்கூடியவர்.

- Advertisement -