உலக கிரிக்கெட்டில் ஐசிசி-யை விட பிசிசிஐ சக்தி வாய்ந்தது என ஆஸ்திரேலிய வீரர்கள் கூறிய கருத்து பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஒரு தனியார் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் இப்படியான பதிலை கூறியிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா பங்கு பெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் ஐசிசி, பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் ஆகிய மூன்றைப் பற்றியும் ஒரே வார்த்தையில் பதில் அளிக்க வேண்டும் என்ற பொழுதுபோக்கு விளையாட்டு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஏழு ஆஸ்திரேலிய வீரர்கள் ஆச்சரியப்படத்தக்க கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
பேட் கம்மின்ஸ் தந்த பதில்
இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐசிசி, பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் முதலாவதாக பதில் அளிக்க வந்தார். அவர் இந்த மூன்றுக்கும் சேர்த்து பிக் அதாவது பெரியது என்ற வார்த்தையோடு முடித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அலெக்ஸ் கேரி, ஸ்மித், ஹெட், உஸ்மான் கவாஜா, கிளன் மேக்ஸ்வெல் மற்றும் நாதன் லயன் ஆகியோர் பங்கு பெற்றார்கள். இதில் ஹெட் மற்றும் ஸ்மித் தவிர மற்ற அனைவரும் ஐசிசி-யை அதிகாரம் வாய்ந்த அமைப்பு என்றும் பாஸ் என்றும் அழைத்தார்கள். அவர்கள் பிசிசிஐ-க்கு இரண்டாவது இடத்தை கொடுத்தார்கள்.
பின் வாங்கிய ஸ்மித் பயப்படாத ஹெட்
இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித் ஐசிசி-யை விட பிசிசிஐ அதிகாரம் படைத்த சக்தி வாய்ந்த அமைப்பு என்று குறிப்பிட்டார். பின்பு சுதாரித்த அவர் சிரித்துக்கொண்டே “இல்லை இல்லை ஐசிசிதான் யாரையும் விட பலமான அதிகாரம் கொண்ட அமைப்பு” என்று கூறி சமாளித்தார்.
இதையும் படிங்க : பும்ராவின் அந்த இடத்தை அஸ்வினுக்கு கொடுத்து இருக்கணும்.. வெளிய அனுப்ப தொடர்ந்து முயற்சி நடந்தது – கவாஸ்கர் விமர்சனம்
இப்படி ஸ்மித் பின்வாங்கிய பொழுதும் கூட ஹெட் ஐசிசி-யை விட பிசிசிஐதான் அதிகாரம் வாய்ந்தது சக்தி மிகுந்தது என்ற தன் கருத்தில் இருந்து பின் வாங்கவில்லை. அவர் இந்த பதிலை உறுதியானதாகவே தெரிவித்தார். ஆஸ்திரேலியா வீரர்கள் இப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தை பற்றி பேசி இருப்பது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக அலசப்பட்டு வருகிறது.






