இந்திய அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-4 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து வீரர்கள் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக சிறந்தவர்கள் என்று சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து ஒருநாள் தொடர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து ஒரு போட்டியில் மட்டுமே ஆறுதல் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தோல்விக்கு குறிப்பாக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னாயின் சுழற் பந்துவீச்சு ஆகும். ஸ்பின் பந்துவீச்சுக்கு எப்போதுமே தடுமாறக்கூடிய இங்கிலாந்து அணி இந்த முறையும் அதில் எந்தவிதமான தொய்வும் இல்லாமல் தொடர்ந்து தடுமாறியது.
அடுத்ததாக இந்திய அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ள நிலையில் அதன் தலைமை பயிற்சியாளரான பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து வீரர்கள் டி20 தொடரில் சுழல் பந்துக்கு எதிராக தோல்வியடைந்தது உண்மைதான் ஆனால் ஒரு நாள் தொடரில் அது போல நிகழாது என்று தனது வீரர்களுக்கு ஆதரவாக சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
தொடரை இழந்தது ஏமாற்றம்தான்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “சில சமயங்களில் நாங்கள் சற்று முன்னோக்கி சென்று விட்டோம். இந்திய அணிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க முயற்சி செய்கிறோம். குறிப்பாக அவர்களிடம் இவ்வளவு நல்ல பேட்டிங் வரிசை இருக்கும்போது விளையாட்டில் இருந்து நேரத்தை ஒதுக்கி வைக்க உங்களுக்கு உண்மையில் நேரம் இருக்காது. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டி20 கிரிக்கெட்டில் இதை இப்படித்தான் இருந்தது. அது இப்போது மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம். எங்கள் வீரர்கள் உண்மையிலேயே சுழற் பந்து வீச்சுக்கு எதிராக சிறந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன்.
இதையும் படிங்க:ஸ்ரேயாஸ் ஐயரை அந்த டீம் வாங்க கூடாதுனு கவனமா இருந்தேன்.. இவருக்கு பேரம் பேசுறது வேஸ்ட் – ரிக்கி பாண்டிங்
இந்திய அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்க வாய்ப்பில்லை. இதற்குக் காரணம் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோரையே சேரும். மேலும் தொடர் 1-4 என்ற கணக்கில் இழந்தது ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதற்கான தெளிவான திட்டத்தை நாங்கள் பார்த்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். எனவே இனி எங்கள் வழியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு முன்னேறுவோம்” என்று கூறி இருக்கிறார். இந்திய அணியின் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.