இன்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பிரமாண்ட சாதனைகள் படித்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் அசத்தி இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டியில் ஆறு வெற்றிகள் பெற்று 12 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் ரியால் ரிக்கல்டன் 38 பந்தில் 61 ரன்கள், ரோகித் சர்மா 36 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் 23 பந்தில் 48 ரன்கள், கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 23 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து பெரிய இழப்பை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு கடந்த போட்டியில் சதம் அடித்த வைபவ் சூரியவன்சி டக் அவுட் ஆனார். பவர் பிளேவில் ஐந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன் தரப்பில் போல்ட்,கரன் சர்மா தலா மூன்று விக்கெட், பும்ரா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதுவரையிலான ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் தாண்டி எடுத்து தோற்றதில்லை என்கின்ற வரலாற்றை இந்த போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்திருக்கிறது. இதுவரை 17 முறை 200க்கும் மேற்பட்ட ரண்களை பாதுகாத்து மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற்று இருக்கிறது.
இதையும் படிங்க : பேட்டிங் பவுலிங் விட.. சிஎஸ்கே அணிக்கு பெரிய ஆபத்தே தோனிதான்.. ப்ளீஸ் இதை கவனிங்க – வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 25 ரன்களுக்கு மேல் 11 போட்டிகளாக சூரியகுமார் எடுத்து புதிய சாதனையை படைத்திருக்கிறார். இந்த வகையில் ராபின் உத்தப்பா இதற்கு முன் 10 போட்டிகளில் தொடர்ந்து 25 ரன்ககளுக்கு மேல் எடுத்தது சாதனையாக இருந்தது. மேலும் 11 போட்டியில் 14 புள்ளிகள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. முதல் இடத்தில் இருந்த ஆர்சிபி அணி 10 போட்டியில் 14 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்துக்கு இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.