பேட்டிங் பவுலிங் விட.. சிஎஸ்கே அணிக்கு பெரிய ஆபத்தே தோனிதான்.. ப்ளீஸ் இதை கவனிங்க – வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர்

0
109

நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 43 வயதான எம்எஸ் தோனி இன்னும் கேப்டனாக இருந்து வருகிறார். காயம் காரணமாக தொடரின் பாதியில் ருத்ராஜ் வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக மீண்டும் கேப்டனாக முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி பொறுப்பேற்று இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் கிரிக்கெட் நிபுணரான டேரன் கங்கா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் பிரச்சனை

சென்னை அணிக்காக இதுவரை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனி கடந்த 2023 ஆம் ஆண்டோடு தனது கேப்டன் பதவியை விட்டு விலகினார். அவருக்கு பதிலாக கடந்த ஆண்டு இளம் வீரர் ருத்ராஜ் கேப்டன் பதவியை ஏற்று அணியை வழி நடத்திய நிலையில் இந்த ஆண்டு காயம் காரணமாக தொடரின் பாதியில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக எம்எஸ் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்று வழி நடத்தி வருகிறார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜடேஜா கேப்டனாக இருந்த நிலையில் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததால், அவர் தனது கேப்டன் பதவியை விட்டு வெளியேற மீண்டும் தோனி பொறுப்பேற்றார். இந்த ஆண்டும் அதேபோல சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் காயம் காரணமாக ருத்ராஜூம் வெளியேற, இந்த முறையும் தோனியே பொறுப்பேற்று இருப்பது எதிர்கால சிஎஸ்கே அணிக்கு நல்ல விஷயம் அல்ல என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேரன் கங்கா கூறியிருக்கிறார்.

- Advertisement -

2 பேர்காக வருத்தப்படுகிறேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஒரு நபராக சிஎஸ்கே அணியின் ருத்ராஜ் கெயிகுவாட் மற்றும் கடந்த காலத்தில் கேப்டனாக இருந்த ரவீந்திர ஜடேஜாவுக்காக நான் வருத்தப்படுகிறேன். எம்எஸ் தோனிக்கு இன்னும் கேப்டன் பதவிக்கான லட்சியங்கள் இருப்பது போன்ற சூழ்நிலை தற்போது சிஎஸ்கேவில் இருப்பது நிச்சயமாக நல்ல விஷயம் கிடையாது. நான் முன்பு இதே மாதிரியான ஒரு சூழ்நிலையில் இருந்திருக்கிறேன்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2025.. 14 வருடத்திற்கு பின்.. மனது வைத்த ரோஹித் சர்மா.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அசத்தல்.. MI vs RR

உங்களுக்குப் பின்னால் கேப்டன் பதவிக்கான லட்சியங்கள் கொண்ட ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்தாலும், அவர் அந்த வேலையில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பது போல காட்டப்படுவது மிகவும் சங்கடமான ஒரு சூழ்நிலையாகும்” என்று அவர் கூறியிருக்கிறார். தற்போது எம்எஸ் தோனிக்கு 43 வயதாகி வருவதால் அடுத்த ஆண்டு சென்னை அணையில் விளையாடுவாரா? அல்லது அவர் ஓய்வு பெற்றால் ருத்ராஜ் திரும்பவும் சிஎஸ்கே அணியை வழிநடத்துவாரா? என்பது போன்ற குழப்பங்கள் சென்னை அணியை சூழ்ந்துள்ளது. எனவே இந்த பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு அடுத்த ஆண்டு மீண்டும் சென்னை அணி கம்பேக் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

- Advertisement -