மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தில் இருப்பதற்கு இது தான் காரணம் – ஷேன் வாட்சன் வெளிப்படைப் பேச்சு

0
356
Shane Watson about Mumbai Indians

நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டியிலும் தோல்வியடைந்து பரிதாபமான நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற அணிகள் அனைத்தும் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றுள்ள நிலையில் மும்பை அணி இன்னும் வெற்றி கணக்கை துவங்காமல் இருக்கிறது.

தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணி அதனுடைய 6வது போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக விளையாட தயாராக இருக்கிறது. சில நிமிடங்களுக்கு முன்னர் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியிலாவது மும்பை இந்தியன்ஸ் அணியை தன்னுடைய முதல் வெற்றியை தடம் பதிக்கும் என்கிற எதிர்பார்ப்பில் அதனுடைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -
நடந்து முடிந்த மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தேர்வு அவ்வளவு சிறப்பாக இல்லை

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் தற்போதைய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியாளருமான ஷேன் வாட்சன் மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி ஒரு சில விஷயங்களை பேசி இருக்கிறார். நடந்து முடிந்த மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவ்வளவு சிறப்பாக வீரர்களை தேர்ந்தெடுக்கவில்லை.

தற்பொழுது புள்ளி பட்டியல் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தில் இருப்பது எந்தவித ஆச்சரியத்தையும் தரவில்லை இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறியுள்ளார். ஏனென்றால் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் அந்த அணி வீரர்களை கைப்பற்றிய விதம் அவ்வளவு சிறப்பாக இல்லை. 15 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு இளம் வீரரான இஷான் கிஷனை அந்த அணி கைப்பற்றியது.

இஷன் கிஷன் மிக அற்புதமான வீரர் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை ஆனால் அவருக்கு இவ்வளவு பெரிய தொகை சரி தானா என்கிற கேள்வி எழுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இங்கிலாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை 8 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது.

- Advertisement -

அனைவருக்கும் தெரியும் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட போவதில்லை என்று. அப்படி இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தைரியமாக அவரை கைப்பற்றியது. இது வரவேற்கத்தக்கது என்றாலும் தற்பொழுது அந்த அணியின் பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இல்லை. நிறைய குறைகள் அந்த அணியில் தற்போது உள்ளது என்றும், மும்பை இந்தியன்ஸ் அணி அதன் காரணமாகவே தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.