ஐபிஎல் 2025

நல்லா வசமா மாட்டிக்கிட்டோம்.. ஆனாலும் இதை நினைச்சா கொஞ்சம் பெருமையாதான் இருக்கு – மும்பை கோச் பேட்டி

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்த நிலையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மும்பை அணிக்கு சிக்கலாகி இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கோச் மகிலா ஜெயவர்த்தனை பிளே ஆப் சுற்றி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

மும்பை அணி தோல்வி

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்த வரை தொடக்கத்தில் 5 போட்டிகளில் 4ல் தோல்வியடைந்து ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று தொடக்கத்தில் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் இருந்தது. இந்த சூழ்நிலையில் அதற்குப் பிறகு மீண்டு எழுந்து வரிசையாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று டாப் லிஸ்டில் இணைந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பையும் அதிகப்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி செய்த சில தவறுகளின் காரணமாக தோல்வி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கோச் மகேலா ஜெயவர்த்தனே இனி வருகிற ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் பிளே ஆப் சுற்று போல நினைத்து விளையாடுவோம் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஒவ்வொரு போட்டியும் முக்கியம்

இதுகுறித்து ஜெயவர்த்தனே விரிவாக கூறும்போது “மும்பை மற்றும் குஜராத் இரு அணிகளும் அந்த போட்டியில் நிறைய தவறுகள் செய்தன. ஆனால் குஜராத் அணியை விட நாங்கள் சில தவறுகளை அதிகமாக செய்தோம். நாங்கள் நினைத்த வகையில் எங்களால் விளையாட முடியவில்லை. குறிப்பாக பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். கடைசி 8 ஓவர்கள் அதிரடியாக விளையாட வேண்டிய நிலையில் நாங்கள் அப்போது சிறப்பாக விளையாடவில்லை. அந்த விக்கெட்டில் 30 ரன்கள் குறைவாக எடுத்திருக்கலாம்.

இதையும் படிங்க:பணம் பதவி புகழ்.. யுவராஜ் அமித் மிஸ்ராவின் குற்றச்சாட்டு.. விராட் கோலி தந்த தரமான பதில்

இருப்பினும் எங்கள் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி வாய்ப்புகளை உருவாக்கினார்கள். இது ஒரு நல்ல அறிகுறியாகும். இனி விளையாடப் போகும் ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் பிளே ஆப் ஆட்டமாக கருதுகிறோம். இதற்கு முந்தைய ஆட்டங்கள் கடுமையாக உழைத்து வெற்றி பெற்றிருக்கிறோம். இன்றைய போட்டியில் வீரர்கள் மீண்டும் வந்த விதத்தை பற்றி அறியும் போது நான் பெருமைப்படுகிறேன்” என பேசி இருக்கிறார். நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த அதன் மூலமாக மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts