ஐபிஎல் 2024

சூர்யா பாய் செஞ்ச அந்த ஒரு விஷயம்.. என்னை அசச்சு பாத்திருச்சு.. அவர் தகுதியானவர் – திலக் வர்மா பேட்டி

நேற்று ஐபிஎல் தொடரில் மும்பை அணி தங்களது சொந்த மைதானத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியில் சூரியகுமார் யாதவுடன் இணைந்து விளையாடிய திலக் வர்மா பெரிய பங்கு வகித்தார். அவர் சூரியகுமார் யாதவ் உடன் இணைந்து விளையாடிய பற்றி பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. துவக்க ஆட்டக்காரர் ஹெட் 30 பந்தில் 48 ரன்கள் எடுக்க, கடைசியில் வந்த கேப்டன் கம்மின்ஸ் 17 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அவர்களுக்கு ஒரு டீசன்டான டோட்டல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் மூன்று விக்கெட்டுகள் பவர் பிளேவில் மிக வேகமாக விழுந்தது. மேலும் விக்கெட்டில் வேகப்பந்து வீச்சுக்கு கொஞ்சம் சாதகம் இருந்தது. இதன் காரணமாக கொல்கத்தா அணிக்கு எதிராக குறைந்த ஸ்கோருக்கு மும்பை தோற்றது போல நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வருமா இருவரும் 79 பந்துகளில் 143 உடன் பாட்னர்ஷிப் அமைத்தார்கள். மேலும் அணியையும் வெற்றி பெற வைத்தார்கள். சூரியகுமார் 51 பந்தில் 102 ரன், திலக் வர்மா 32 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்கள்.

- Advertisement -

போட்டிக்கு பிறகு பேசிய திலக் வர்மா கூறும் பொழுது “ஆரம்பத்தில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. நாங்கள் பேட்டை நேராக வைத்து விளையாட மிகவும் சிரமப்பட்டோம். எங்களிடம் 360 டிகிரி பேட்ஸ்மேன் இருப்பதால், ஆரம்பத்தில் நாங்கள் டெஸ்ட் இல்லை ஒருநாள் கிரிக்கெட் போல ஒழுக்கத்துடன் விளையாட நினைத்தோம். ஆனால் சூரியகுமார் மார்க்கோ யான்சனை அடித்ததை பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

இதையும் படிங்க : ஒரே ஒரு ஆசைதான்.. சிஎஸ்கேவை விட்டுக் கிளம்பிய பின் பதிரனா பதிவு.. கலங்கும் ரசிகர்கள்

இது பெரிய சீசன் எனவே நாங்கள் மெதுவான மற்றும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான விக்கெட்டுகளை பெறுவோம். நான் என்னுடைய அடிக்கும் இன்டெண்ட்டை அப்படியே வைத்திருந்தேன். மேலும் சூர்யா பாய் இந்த சதத்திற்கு தகுதியானவர். இதன் காரணமாகவே நான் அவருக்கு அந்த நேரத்தில் ஒரு சிங்கிள் எடுத்துக் கொடுத்தேன்” என்று கூறியிருக்கிறார்.

Published by