சிஎஸ்கே அணி வீரர் சிவம் துபே வெளியில் சொன்ன ஒரு ரகசியத்தின் காரணமாக இன்று சுதாரித்துக் கொண்ட ஹர்திக் பாண்டியா தோனியை மடக்கியது குறித்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இன்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மும்பையின் சொந்த மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக மிகச் சிறப்பான முறையில் தோனிக்கு வலை விரித்து ஆட்டம் இழக்க வைத்து வெளியே அனுப்பினார்.
சிஎஸ்கே அணி தங்களது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று இருந்தது. இதற்கு அடுத்து தொடர்ந்து ஐந்து போட்டிகளை தோற்று இருந்தது. இந்த நிலையில் ஆறாவது போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக லக்னோவின் சொந்த மைதானத்தில் வென்றது. இது சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வெற்றியாக அமைந்தது.
இந்த நிலையில் அந்தப் போட்டியில் கடைசியில் ரவி பிஸ்னாய்க்கு ஒரு ஓவர் இருந்த பொழுதும் தோனி ஸ்பின்னர்களுக்கு தடுமாறுவார் என்று தெரிந்தும், சிவம் துபே இருந்த காரணத்தினால் ரிஷப் பண்ட் அவருக்கு ஓவர் கொடுக்கவில்லை. இந்த நிலையில் சிவம் துபே தோனி தன்னை கிரீசில் தொடர்ந்து இருக்கும் படியும், அப்படி இருந்தால் ரவி பிஸ்னாய் வந்து வீச வரமாட்டார் என்று கூறியதாகவும் வெளியில் தெரிவித்து இருந்தார். இது தோனி வேகப் பந்துவீச்சாளர்களை அடித்து விளையாட உதவி இருந்தது.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா தோனி களத்தில் இருக்கும் பொழுது இடது கை பேட்ஸ்மேன் ஜடேஜா இருந்தாலும் கூட இடதுகை சுழல் பந்துவீச்சாளர் மிட்சல் சான்ட்னரை 18 து ஓவருக்கு கொண்டு வந்தார். இந்த ஓவரில் தோனியால் அதிரடி காட்ட முடியவில்லை. மேலும் அந்த ஓவரில் ஆறு ரன்கள் மட்டுமே வந்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட அழுத்தத்தால் அடுத்த பும்ரா ஓவரில் 6 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து தோனி ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : 17 வயசு பையன்.. 10 பந்துல செஞ்ச விஷயத்தை.. மத்த சிஎஸ்கே பிளேயர்ஸ் செய்ய 278 பந்துகள் ஆயிருக்கு.. ஐபிஎல் 2025
இந்த நிலையில் கடைசி கட்டத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் வராமல் இருப்பதற்கு தோனி என்ன செய்கிறார் என்கின்ற ரகசியத்தை சிவம் துபே வெளியில் கூறியதால்தான், இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா சுழல் பந்துவீச்சாளரை கொண்டு வந்து மடக்கி விட்டார் என்றும், ரகசியங்களை எப்பொழுதும் போட்டிக்குப் பிறகு வெளியே கூறக்கூடாது எனவும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்