17 வயசு பையன்.. 10 பந்துல செஞ்ச விஷயத்தை.. மத்த சிஎஸ்கே பிளேயர்ஸ் செய்ய 278 பந்துகள் ஆயிருக்கு.. ஐபிஎல் 2025

0
230

ஐபிஎல் 2025 கிரிக்கெட் லீக் தொடரின் 38 வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய 17 வயது வீரர் ஆயுஸ் மாத்ரே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

17 வயது வீரர் அறிமுகம்

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அறிமுக வீரராக சென்னை அணிக்கு 17 வயது வீரர் மும்பையைச் சேர்ந்த ஆயுஸ் மாத்ரே களம் இறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர் என 32 ரன்கள் குவித்து தீபக்சஹார் பந்து வீச்சில் வெளியேறினார்.

இந்தப் போட்டியில் குறிப்பாக மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் ரச்சின் ரவீந்தீரா ஆட்டம் இழந்து வெளியேற, அவருக்குப் பிறகு மூன்றாவது வரிசை வீரராக ஆயுஷ் மாத்ரே களம் இறங்கினார். அஸ்வானி குமார் மூன்றாவது ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்த ஆயுஷ், அடுத்த இரண்டு பந்துகளில் சிக்ஸர்கள் அடித்து தனது முத்திரையை பதித்தார். இவரது அதிரடி ஆட்டத்தை கண்டு சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

- Advertisement -

சிஎஸ்கேவில் கவனிக்க வேண்டிய விஷயம்

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு 17 வயது வீரர் தனது அறிமுக போட்டியில் முதல் 10 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்திருக்கும் நிலையில், மற்ற அனைத்து சிஎஸ்கே வீரர்களும் இந்தத் தொடரில் மொத்தமாக 278 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாகும்.

இதையும் படிங்க:வைபவ் எழுச்சி சும்மா வரல.. தினம் 600 பந்துகள் கடும் பயிற்சி.. அவர் அப்பா 10 பேருக்கு சாப்பாடு கொடுப்பார் – வைபவின் கோச் பேட்டி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர் என 53 ரன்கள் குவித்திருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் சிவம் தூபே 32 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெற்றி இலக்கை நோக்கி மும்பை அணி விளையாடி வருகிறது.

- Advertisement -