ஐபிஎல் 2025

சூரியவன்சி டக் அவுட்.. ரோகித்தும் மும்பையும் செய்த காரியம்.. ரவி சாஸ்திரி தெரிவித்த பாராட்டு

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. இந்த போட்டியில் டக் அவுட் ஆன இளம் வீரர் வைபவ் சூரியவன்சிக்கு மும்பை இந்தியன்ஸ் செய்த காரியம் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ரியான் ரிக்கல்டன் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி அரைசதங்கள் அடிக்க அந்த அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 117 ரன் மட்டுமே எடுத்து சுருண்டு 100 ரன் வித்தியாசத்தில் தோல்வி.

சூரியவன்சிக்கு பரிதாபம்

நேற்றைய போட்டிக்கு முன்பாகவே மும்பை பவுலர் போல்ட் சூரியவன்சியை அதிரடியாக விளையாடுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 217 ரன்கள் குவித்திருந்தது. எனவே ராஜஸ்தான் அணி எடுத்ததும் அதிரடியில் ஈடுபட வேண்டிய அவசியமும் இருந்தது.

இந்த நிலையில் தீபக்சகர் வீசிய முதல் பந்தை தடுத்து விளையாடிய சூரியவன்சி இரண்டாவது பந்தை தூக்கி அடித்து டக் அவுட் ஆனார். இதற்கு முந்தைய போட்டியில் 35 பந்தில் வேகமான சதம் அடித்து உலகை திரும்பி பார்க்க வைத்த அவரால் அடுத்த போட்டியில் ஒருவர் கூட எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மற்றும் ரோகித் சர்மா ஒவ்வொருவரும் சூரியவன்சியை தாண்டி செல்லும் பொழுது அவருக்கு நம்பிக்கையையும் அறிவுரையும் கூறினார்கள்.

- Advertisement -

ரோகித் சர்மா செய்த செயல்

இந்த போட்டியின் முடிவுக்குப் பிறகு வீரர்கள் கைக்குலுக்கிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது ரோஹித் சர்மா சூரியவன்சியை நிறுத்தி சில வார்த்தைகள் பேசினார். இதே போல எல்லா மும்பை இந்தியன்ஸ் வீரர்களும் இதை செய்தார்கள். இதைப் பார்த்த ரவி சாஸ்திரி இந்த இளம் வீரர் நிச்சயம் கற்றுக் கொள்வார், ரோகித் சர்மா மாதிரியான பெரிய வீரர்களிடமிருந்து அவருக்கு நல்ல விஷயங்கள் கிடைக்கும் என்று கூறினார்.

இதையும் படிங்க : சிஎஸ்கேக்கு இருக்கிற துணிச்சல்.. ராஜஸ்தான் அணிக்கு இருக்கா.? அவர வெளிய விட்டதுக்கு யாரு பொறுப்பு ஏற்பா?. ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி

இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “ஒவ்வொரு மும்பை இந்தியன்ஸ் வீரரும் தாண்டி செல்லும்பொழுது அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு வீரர் எல்லா போட்டியிலும் அடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 14 வயதில் கடந்த போட்டியில் சதம் அடித்தார். இந்த போட்டியில் டக் அவுட் ஆனார். அவருடைய விளையாட்டு இதுதான். இந்த சிறுவனால் கற்றுக்கொள்ள முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts