சிஎஸ்கேக்கு இருக்கிற துணிச்சல்.. ராஜஸ்தான் அணிக்கு இருக்கா.? அவர வெளிய விட்டதுக்கு யாரு பொறுப்பு ஏற்பா?. ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி

0
83

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் ராஜஸ்தான் அணி குறித்து விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

தொடரில் இருந்து வெளியேறிய ராஜஸ்தான்

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 217 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்ட்டன் 38 பந்துகளை எதிர் கொண்டு 61 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் வைபவ் டக் அவுட் ஆகி வெளியேற மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது அந்த அணியின் முன்னாள் வீரரான ஜாஸ் பட்லரை மிஸ் செய்தது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இந்த சூழ்நிலையில் ஏலத்தின் போது தவறு செய்ததாக சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹசி கூறியதைப் போல ராஜஸ்தான் அணியில் யார் பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என்று கூறவேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இதற்கு யார் பொறுப்பேற்பது?

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவறு செய்ததை ஒப்புக் கொண்டதாக மைக்கேல் ஹசி கூறியதை நாம் கேட்டிருந்தோம். இப்போது அவர்கள் தொடரிலிருந்து வெளியேறி விட்டனர். அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜாஸ் பட்லர் குறித்த முடிவு என்ன நடந்தது என்பது குறித்து யாராவது பொறுப்பேற்க வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ் தவறு செய்து இப்போது வெளியேறிவிட்டது. எனவே இதற்கும் சில பொறுப்புக் கூறல்கள் இருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க:சதம் அடிச்சாருனு புகழாதீங்க.. அந்த தம்பி ஏலம் நடக்கும் போதே இந்த ரெக்கார்டு வெச்சுட்டுதான் வந்திருக்காரு – சுனில் கவாஸ்கர்

நிச்சயமாக உள்நாட்டில் கேள்விகள் அவர்களுக்கு கேட்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன் இது ஒரு மிகப்பெரிய தவறாகும” என்று அவர் கூறியிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் மற்றும் போல்ட் ஆகிய இருவரும் தக்க வைக்காமல் வெளியே விட்டது ராஜஸ்தான் செய்த மிகப்பெரிய தவறாக அமைந்துள்ளது. இதனால் பத்து போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி வரும் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -