ஐபிஎல் 2025

ஓப்பனா சொல்றேன்.. என்னை மும்பை அணி ரிட்டையர்டு செஞ்சப்போ இப்படிதான் ஃபீல் பண்ணேன்.. மனம் திறந்து பேசிய திலக் வர்மா

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் தான் ரிட்டையர்டு ஹர்ட் செய்யப்பட்டது குறித்து திலக் வர்மா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

ரிட்டையர்டு செய்யப்பட்ட திலக் வர்மா

டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் குவிக்க அதனை எதிர்கொண்டு விளையாடிய டெல்லி அணி இறுதிக்கட்டத்தில் மும்பை அணியின் சிறந்த பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த சில போட்டிகளுக்கு முன்பாக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதில் மும்பை அணி வெற்றி இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்த போது 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்த திலக் வர்மா மெதுவாக விளையாடிய காரணத்தால் ரிட்டையர்டு செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சான்ட்னர் உள்ளே கொண்டுவரப்பட்டார். அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஒருவருக்கு இந்த வகையில் செய்வது அவரது தன்னம்பிக்கையை கெடுக்கும் வகையில் அமையும் என்று பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்தனர். அது குறித்து தற்போது திலக் வர்மா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

அதை இப்படித்தான் எடுத்துக் கொண்டேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் அந்தப் போட்டியில் ரிட்டையர்டு செய்யப்பட்டது குறித்து பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை. அவர்கள் அணியின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று நேர்மறையான வழியிலேயே அந்த முடிவை எடுத்துக் கொண்டேன். அதனை நான் எந்த விதத்திலும் எதிர்மறையாக எடுத்துக் கொள்ளவில்லை. உங்களுக்கு இது போன்ற ஒரு விஷயம் நடக்கும் போது நீங்கள் அதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் கையாளுகிறீர்கள் என்பது தான் மிகவும் முக்கியம்.

இதையும் படிங்க:அந்த ஒருவரால் எங்கள் அணி தோற்றுவிடுமோ என்று நினைத்தேன்.. அப்பதான் அந்த அற்புதம் நடந்துச்சு – ஹர்திக் பாண்டியா

அதனால் நான் இதனை இப்படித்தான் யோசித்து எடுத்துக் கொண்டேன். நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய களம் இறங்கினாலும் சௌகரியமாகவே இருக்க விரும்புகிறேன். அதனால்தான் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் நீங்கள் எந்த வரிசையில் என்னை அனுப்பினாலும் பரவாயில்லை, நான் அதற்கு ஏற்றவாறு சௌகரியமான வகையில் என்னால் முடிந்ததை செய்வேன் என்று கூறி இருக்கிறேன்” என திலக் வர்மா கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts