பாவம் சின்ன பையனுக்கு அபராதம் போட்டிங்களே.. இப்போ இதை என்ன சொல்றது.? கோலியை மறைமுகமாக விமர்சித்த ஆகாஷ் சோப்ரா

0
101

நியூ சண்டிகரில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இருந்தது.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி வெற்றி கொண்டாட்டம் குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா மறைமுகமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியின் கொண்டாட்டம்

18-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணி, சொந்த மண்ணில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது சுற்று ஆட்டம் நேற்று மாலை நடைபெற்ற நிலையில் இந்த முறை பஞ்சாபில் உள்ள நியூ சண்டிகரில் போட்டி நடைபெற்றது.

சின்னசாமி மைதானத்தில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு சிறப்பாக விளையாடிய விராட் கோலி 73 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். வெற்றி பெற்றவுடன் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை வெறுப்பேற்றும் விதமாக அவருக்கே உரித்தான கொண்டாட்ட பாணியில் ஈடுபட்டார்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா மறைமுக சாடல்

அது ஸ்ரேயாஸ் ஐயர் நட்பு ரீதியாக பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அது பார்ப்போர்க்கு சற்று நெருடலை ஏற்படுத்தியது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா லக்னோ அணியின் பந்துவீச்சாளர் திக்வேஸ் ரதியை முன்னிலைப்படுத்தி விராட் கோலியின் செயல்பாட்டை மறைமுகமாக விமர்சனம் செய்திருக்கிறார். எதிரணியின் விக்கட்டை வீழ்த்தியவுடன் நோட்புக்கில் கையொப்பம் இட்டு தருவது போன்ற கொண்டாட்டத்தை லக்னோ வீரர் திக்வேஷ் ரதி செய்து வந்த நிலையில் அவரது செயல்பாட்டை கண்டித்து பிசிசிஐ அவருக்கு அபராதம் விதித்தது.

இதையும் படிங்க:மக்கள் பாராட்டணும்னு இதை செய்யாதீங்க.. சேவை செய்ய ஐபிஎல் விளையாட வேண்டாம்.. ராஜஸ்தான் அணியை விமர்சித்த ராயுடு

இந்த சூழ்நிலையில் நேற்று விராட் கோலியின் செயல்பாடும் அதற்கு இணையாக இருந்ததாக பலரும் கூறிவரும் நிலையில் அதற்கு பிசிசிஐ எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதற்கு ஆகாஷ் சோப்ரா தனது சமூக வலைதளத்தில் “திக்வேஸ் ரதி நோட்புக்கில் கையொப்பம் இடுவது போல ஈடுபட்ட கொண்டாட்டத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதனால் பாவம் பையன் இப்போது தரையில் எழுத ஆரம்பித்து விட்டான்” என்று கூறி இருந்தார். இது விராட் கோலியின் செயல்பாட்டை மறைமுகமாக கண்டித்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -