நேற்று ஐபிஎல் தொடரில் பரபரப்பான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த காரணத்தினால் திடீரென பிளே ஆப் வாய்ப்பில் பெரிய சிக்கலை சந்தித்து இருக்கிறது.
இந்த போட்டியில் கடைசி பந்து வரை சென்றது. ஹர்திக் பாண்டியா இறுதி ஓவரை தான் வீசாமல் தீபக்சகர் கையில் கொடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கம் போட்டியை திருப்பிய பும்ராவின் உழைப்பு வீணடிக்கப்பட்டது.
மும்பைக்கு வினோத சிக்கல்
தற்போது மும்பை அணி 12 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றிகள் உடன் 14 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த அணிக்கு மீதம் இருக்கும் இரண்டு போட்டியும் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்கும் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிராக இருக்கிறது.
இதில் டெல்லி அணி 11 போட்டிகளில் 13 புள்ளிகள், பஞ்சாப் அணி 11 போட்டிகளில் 15 புள்ளிகள் எடுத்து இருக்கின்றன. மும்பை அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் இருக்க, இந்த இரண்டு அணிகளுக்கும் மூன்று போட்டிகள் மீதம் இருக்கிறது. எனவே மும்பை அணி இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டியையும் வெல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
மும்பையின் மும்முனை சிக்கல்
மும்பை அணி டெல்லி அணிக்கு எதிரான போட்டியை வென்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியை தோற்றால் 16 புள்ளிகள் உடன் இருக்கும். அதே சமயத்தில் டெல்லி மும்பை இடம் தோற்றுவிட்டு மீதி இரண்டு போட்டியையும் வென்றால் 17 புள்ளிக்கு சென்று விடும்.
இதே போல மும்பை பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியை வென்று, டெல்லி அணிக்கு எதிரான போட்டியை தோற்றால் நிலைமை இன்னும் சிக்கலாகிவிடும். ஏனென்றால் டெல்லிக்கு மும்பை இடம் இரண்டு புள்ளிகள் கிடைப்பதோடு, அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்றை வென்றாலும் 17 புள்ளிகள் வந்துவிடும். பஞ்சாப் மும்பையிடம் தோற்று விட்டு மீதம் இருக்கும் ஒரு போட்டியில் வென்றாலும் 17 புள்ளிக்கு வந்து விடும்.
இதையும் படிங்க : ஐபிஎல் விட்டு வெளியேறும் தோனி?.. சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன் யார்.. வெளியான புதிய தகவல்கள்
எனவே மும்பை அணி தனக்கு மீதம் இருக்கும் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். இல்லையென்றால் டெல்லி அணி இரண்டு போட்டிகளை தோற்க வேண்டும். பஞ்சாப் மூன்று போட்டிகளையையும் தோற்க வேண்டும். அப்போது இப்படியான மும்முனை பிரச்சனைகள் மும்பை திடீரென மாட்டிக் கொண்டிருக்கிறது. எனவே பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறவும் வாய்ப்புகள் உண்டு!






