திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. 17 வருட ஐபிஎல்லில் வரலாறு படைத்த மும்பை அணி.. பும்ரா அபாரம்.. 54 ரன்னில் லக்னோ தோல்வி

0
552

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 45வது போட்டி இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பாக மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

மும்பை லக்னோ மோதல்

மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். காயம் காரணமாக வெளியேறி இருந்த மயாங்க் யாதவ் இந்த சீசனில் லக்னோ அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடினார். இந்த சூழ்நிலையில் தனது பேட்டிங் துவங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் மயாங்கின் பந்து வீச்சில் வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய வில் ஜாக்ஸ் ரிக்கல்ட்டன் உடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடியது.

இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்த நிலையில் ரிக்கல்டன் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து 58 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாட மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யா 28 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 54 ரன்கள் குவித்து வெளியேறினார்.

- Advertisement -

பும்ரா அசத்தல் பவுலிங்

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி லக்னோ அணி களம் இறங்கியது. இந்த முறை துவக்க வீரர் மார்க்ரம் 9 ரன்னில் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க, மார்ஸ் மற்றும் பூரான் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் நட்சத்திர வீரர் பூரான் 15 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 27 ரன்கள் குவித்த நிலையில் வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் வெளியேற, அதற்குப் பின்னர் களம் இறங்கிய ரிஷப் பண்ட் வெறும் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க:5 கோப்பை மும்பைக்கு.. பும்ரா செய்த வரலாற்று சாதனை.. இனி எந்த வீரரும் தொடுவது கடினம்

அதற்குப் பிறகு சிக்கலில் மாட்டிக் கொண்ட லக்னோ அணியை இளம் வீரர் ஆயுஸ் பதோனி காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்குள் மார்ஸ் 34 ரன்னில் வெளியேற, பிறகு பதோனியும் தாக்குப் பிடிக்கவில்லை. 22 பந்துகளில் 35 ரன்கள் குவித்து அவரும் வெளியேற, டேவிட் மில்லர் 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு அப்துல் சமத் மற்றும் ஆவேஸ் கான் என இருவரும் பும்ரா பந்துவீச்சில் வெளியேற, இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பும்ரா நான்கு ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். மற்றொரு பவுலரான போல்ட் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகள் பெற்ற முதல் அணி என்ற வரலாறையும் படைத்துள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -