இன்று நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நட்சத்திர வீரர் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார்.
தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்திற்குள் முன்னேறுவதற்கு இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.
மீண்டு வந்த மும்பை இந்தியன்ஸ்
நடப்பு ஐபிஎல் தொடரில் பலமான அணியாக இருந்த போதும் கூட மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆட ஆரம்பித்ததும் மும்பை இந்தியன்ஸ் அணி வரிசையாக வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரியான் ரிக்கல்ட்டன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அதிரடியாக அரை சதம் அடித்தார்கள். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 216 ரன்கள் குவித்தது.
பும்ரா வரலாற்று சாதனை
இதைத்தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாட வந்த லக்னோ அணி அதிரடியாக ஆரம்பித்தது. இதன் காரணமாக இன்று மூன்றாவது ஓவருக்கே பும்ராவை கேப்டன் ஹர்திக் பாண்டியா கொண்டு வந்தார். அப்போது களத்தில் எய்டன் மார்க்ரம் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார்.
இதில் முதல் மூன்று பந்துகளை ரன் இல்லாமல் வீசிய பும்ரா நான்காவது பந்தில் எய்டன் மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக விக்கெட் வீழ்த்தியவராக மலிங்கா சாதனையை முறியடித்து பும்ரா புது சாதனையை படைத்தார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. லக்னோ பந்துவீச்சை சூளுக்கு எடுத்த ரிக்கல்டன், சூர்யகுமார்.. மும்பை ரன் குவிப்பு
மும்பை அணிக்காக அதிக விக்கெட்:
171 ஜஸ்பிரித் பும்ரா
170 – லசித் மலிங்கா
127- ஹர்பஜன் சிங்
71-எம் மெக்லெனகன்
69- கீரன் பொல்லார்ட்
65- ஹர்திக் பாண்டியா






