ரோகித் சர்மாவுக்கு அந்த திறமை இல்லாததால.. அவரை நான் இம்பாக்ட் பிளேயரா தான் பயன்படுத்த முடியும் – மும்பை கோச் அதிரடி

0
273

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆறாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெற்றி பெறும் கட்டாயத்தில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன மகேலா ஜெயவர்த்தனே சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது மார்ச் 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் 5 முறை ஐபிஎல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த ஐந்து ஆண்டுகளாக கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வருகிறது. ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்ற பிறகும் அந்த அணி கோப்பையை வெல்லாமல் திணறி வருவது பல்வேறு விவாதங்களை எழுப்பி வருகிறது.

இதில் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா கடந்த சில ஐபிஎல் தொடர்களில் இம்பாக்ட் பிளேயராக மட்டுமே விளையாடி வருகிறார். அதாவது பேட்டிங் செய்ய களமிறங்கும் ரோஹித் சர்மா பீல்டிங் செய்வதற்கு களத்தில் அதிக நேரம் இருப்பதில்லை என்று அது பெரிய விமர்சனங்களை உருவாக்கியது. இந்த சூழ்நிலையில் இதுகுறித்து தலைமை பயிற்சியாளர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோஹித் சர்மாவை நாங்கள் கடந்த ஆண்டுகளில் பயன்படுத்தும் முறை குறித்து கேட்டால் அவருக்கு சிறு காயங்கள் அப்போது இருந்தன. எனவே நாங்கள் அதனை மிகவும் கவனமாக கையாள வேண்டிய எச்சரிக்கை இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அவர் களத்தில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவர் அணியின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுவார்.

ஆனால் இந்த ஆண்டில் நிச்சயம் என்னால் முடிந்தவரை அவரை அதிக நேரம் களத்தில் வைத்திருக்க முயற்சி செய்கிறேன். ஆனால் நாங்கள் பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் மாற்ற வேண்டுமென்றால் அல்லது இம்பாக்ட் பிளேயரை பயன்படுத்த வேண்டும் என்றோ, இல்லையென்றால் வேறொரு வீரர் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அந்த சூழலை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். எங்கள் அணியில் ஆல்ரவுன்டர் இல்லாத வீரர்கள் என்று குறிப்பிட்டால் அது ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் தான். எனவே கேப்டனுக்கு தகுந்த வீரர்கள் தேவைப்பட்டால் எந்த எதிரணி விளையாடுகிறதோ அது குறித்து மாற்று வீரர்களை நாங்கள் பரிசீலிக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -