மின்னல் வேக ஸ்டம்பிங்.. செய்த தவறை சரி செய்த தோனி.. திகைத்து போன சூர்ய குமார் யாதவ்.. ஐபிஎல் 2025

0
1188

ஐபிஎல் 18வது சீசன் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதன் மூன்றாவது போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடும் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் சிஎஸ்கே அணியின் மகேந்திர சிங் தோனி மும்பை கேப்டனுக்கு செய்த ஸ்டம்பிங் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சிஎஸ்கே மும்பை மோதல்

‘எல் கிளாசிகோ’ என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். சென்னை அணியில் முக்கிய அம்சமாக பத்திரானா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி தனது பேட்டிங் துவங்கியது.

அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தான் சந்தித்த 4வது பந்தியிலேயே கலில் அகமதுவின் பந்துவீச்சில் சிவம் டுபேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் 13 ரன்னில் வெளியேற, அதிரடி ஆட்டக்காரர் வில் ஜேக்ஸ் 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி சரிவில் இருந்த மும்பை அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

- Advertisement -

தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்

இந்த பார்ட்னர்ஷிப் உருவாகி கொண்டிருந்தபோது சரியாக ஆட்டத்தின் 11 வது ஓவரில் ருத்ராஜ் நூர் அகமதுவின் கையில் பந்தை கொடுத்தார். திலக் வர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நூர் அகமது தனது முதல் பந்தை ஆஃப் சைடில் சற்று அகலமாக வீச, சரியாக கவனிக்க தவறிய தோனி அந்த பந்தை மிஸ் செய்தார். அதனால் பௌண்டரி எல்லையை கடந்து 4 ரன்கள் கிடைத்தது. பொதுவாக சேப்பாக்கம் மைதானத்தில் விக்கெட் கீப்பிங்கில் தோனி செய்யும் அரிதான தவறாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் மூன்றாவது பந்தை சூர்யா எதிர்கொள்ள சற்று இறங்கி வந்து அடிக்க முயற்சித்தார்.

இதையும் படிங்க:எனக்கே பயமா இருந்துச்சு.. இந்த மேட்ச் மூலமா.. என் முடிவு இனி இதுதான் – பேட் கம்மின்ஸ் பேட்டி

ஆனால் அவரை ஏமாற்றி பந்து தோனியின் கைகளுக்கு செல்ல, தோனி ஒரு நொடி கூட வீணாக்காமல் அடுத்த கணமே ஸ்டம்பிங் செய்து சூரியகுமார் யாதவை வெளியேற்றி முதல் பந்தில் செய்த தனது தவறையும் திருத்தினார். இதனால் திகைத்துப் போன சூரியகுமார் யாதவ் சில வினாடிகள் அங்கேயே நின்று தான் ஆட்டமிழந்ததை யோசித்தபடி வெளியேறினார். அவரது விக்கெட் சென்னை அணிக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து சூரியக்குமார் யாதவ் வெளியேற சற்று முன்பு வரை மும்பை அணி 14.2 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

- Advertisement -