18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் சூரிய குமார் யாதவ் சென்னை அணிக்கு எதிரான திட்டம் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்ற வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை முதல் போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடத் தவறிய நிலையில் அந்த அணியின் தற்போதைய கேப்டனாக சூரியகுமார் யாதவ் பொறுப்பேற்று இருக்கிறார். சென்னை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இவர்தான் மும்பை இந்தியன்ஸ் அணியை வழி நடத்துவார்.
இந்த சூழ்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சென்னை அணியில் அஸ்வின், ஜடேஜா மற்றும் நூர் அகமது என்று தரமான சுழற் பந்து வீச்சாளர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். எனவே சென்னை மைதானத்தில் சுழற் பந்துவீச்சை எப்படி எதிர்கொண்டு விளையாடுவது என்று மும்பை இந்தியன்ஸ் அணி தகுந்த திட்டங்கள் தீட்ட வேண்டி இருக்கும். அதேபோல சென்னை அணியை பொறுத்தவரை மகேந்திர சிங் தோனி மிடில் வரிசையில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் காயமடைந்தாலும், இறுதியில் களமிறங்கி சிக்ஸர்களாக அடித்து நொறுக்கினார். எனவே இந்த சீசனில் அவர் முழு உடற்தகுதியை எட்டி இருக்கும் நிலையில், அவரது பேட்டிங் சென்னை அணிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மும்பை அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ், சுழற் பந்து வீச்சை எதிர்கொள்வதன் திட்டம் குறித்தும் தோனியை எப்படி கட்டுப்படுத்துவது குறித்தும் சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க:5 சீசன்னு கனவு காண வேண்டாம்.. ஆர்சிபி நெனச்சது இல்லனா கண்டிப்பா மாட்டுவாரு – ஹர்பஜன் எச்சரிக்கை
இந்தப் போட்டி குறித்து சூரியகுமார் யாதவ் கூறிய போது “நாளைய போட்டியில் சுழற் பந்துவீச்சை எப்படி எதிர்கொண்டு விளையாடுவீர்கள் என்று கேட்கிறீர்கள். சுழற் பந்துவீச்சை சிக்சர்களாகத்தான் அடித்து விளையாட போகிறோம்.( சிரித்துக் கொண்டே) மேலும் தோனியை கட்டுப்படுத்துவது குறித்து கேட்கிறீர்கள். எத்தனை வருடங்களாக அவரை கட்டுப்படுத்த முடிந்ததா? அடுத்த போட்டியில் கட்டுப்படுத்துவதற்கு” என்று பேசி இருக்கிறார்.