நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஓனர் மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக அரை சதம் அடித்து அணியை வெல்ல வைத்தார். இது குறித்து அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஏழு போட்டிகளாக ரோகித் சர்மாவின் பேட்டி மிக மோசமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அவர்களது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக வழக்கமான அதிரடிக்கு திரும்பி அணியும் வெற்றி பெற வைத்தார். அவரது பேட்டிங் ஃபார்ம் தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது.
அதிக ஆட்டநாயகன் விருது வென்றவர்
நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்து நூறு ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அவர் மொத்தம் 45 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்தார்.
அவரது சிறப்பான பேட்டிங் காரணமாக நேற்று ஆட்டநாயகன் விருது அவருக்கு கொடுக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் அது அவருக்கு இருபதாவது ஆட்டநாயகன் விருதாக அமைந்தது. மேலும் இருபதாவது ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
ரோகித்தைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை
இது குறித்து பேசி இருக்கும் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “இந்த போட்டி ஹைகோரிங் போட்டியாக இருக்கும் என எங்களுக்கு தெரியும். இந்த போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் விளையாடிய விதத்தில் எங்களுக்கு ஒரு நிம்மதி கிடைத்தது. ரோகித் ஷர்மா பார்ம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் வெளியேறி சிறப்பாக ஆட ஆரம்பித்தால் எதிரணி வெளியேறிவிடும். சூர்யா பேட்டிங் செய்த விதமும் சிறப்பாக இருந்தது. அதுதான் ஆட்டத்தை சிஎஸ்கேவிடமிருந்து பறித்தது”
இதையும் படிங்க : சிஎஸ்கே ரசிகர்களே எனக்கு இத செஞ்சது சந்தோஷமா இருக்கு.. அவங்கதான் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் – ரோகித் சர்மா
“நாங்கள் அடிப்படைகளில் ஒட்டிக்கொண்டு எளிமையான கிரிக்கெட் விளையாடி வருகிறோம். மேலும் இன்றைய போட்டியில் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்கள் கொடுத்தார்கள். ஆனால் நாங்கள் போட்டி முடிவில் அவர்களை 180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தோம். எனவே நாங்கள் வெற்றியில் இருந்து வெகு தூரத்தில் இல்லை என்று தெரியும். எங்களுக்கு வெற்றியை ஒருங்கிணைப்பதில்தான் பிரச்சனை இருந்து வந்தது. இப்போது அப்படி இல்லை” என்று கூறியிருக்கிறார்.






