ஐபிஎல் 2024

17.2 ஓவர்.. சூர்யகுமார் அதிரடி சதம்.. சிஎஸ்கேவுக்கு உதவிய மும்பை.. ஹைதராபாத் தோல்வி

இன்று ஐபிஎல் தொடரின் 55 வது போட்டியில் மும்பை இந்தியன் அணியும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் சூரிய குமாரின் அதிரடி சதத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அந்த அணிக்கு முதல் விக்கட்டுக்கு 37 பந்துகளில் 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. அபிஷேக் ஷர்மா 16 பந்தில் 11 ரன்கள் எடுத்தார். ஹெட் இன்று இரண்டு கேட்ச் வாய்ப்பில் தப்பி 30 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஹைதராபாத் அணியின் விக்கட்டுகள் நடுவில் வேகமாக சரிந்தன. இந்த நிலையில் அந்த அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் தாண்டுமா? என்ற நிலையில் கேப்டன் பாட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். அந்த அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சுழல் பந்துவீச்சாளர் இருவரும் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.

மேற்கொண்டு இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு இஷான் கிஷான் 7 பந்தில் 9 ரன்கள், ரோகித் சர்மா 5 பந்தில் 4 ரன்கள், நமன் திர் 9 பந்தில் ரன்கள் ஏதும் இல்லாமல் அடுத்தடுத்து வெளியேறி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய நெருக்கடியை உண்டாக்கி சென்றார்கள்.

- Advertisement -

இவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த சூர்யா குமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் மிகச் சிறப்பான முறையில் விளையாடி, மும்பை அணிக்கு நடப்பு ஐபிஎல் சீசனில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை கொண்டு வந்தார்கள். சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 30 பந்தில் அரைசதம் அடித்தார்.

மேலும் தொடர்ந்து விளையாடிய சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் தனது இரண்டாவது அரைசதத்தை அடித்தார். அவர் மொத்தம் 51 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய திலக் வர்மா 32 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 79 பந்துகளில் 143 ரன்கள் குவித்தது. 17.2 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் நான்காவது வெற்றியை மும்பை பெற்றது.

இதையும் படிங்க : 8000 பேர்.. சின்ன விஷயம் ஆனா பெரிய சிந்தனை.. சிஎஸ்கே செய்த காரியம்.. ரசிகர்கள் பாராட்டு

புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் ஆறு வெற்றி உடன் மூன்றாவது இடத்தில் இருந்தது. ஹைதராபாத் அணி 10 போட்டியில் ஆறு வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது. இன்று அந்த அணியை 11ஆவது போட்டியில் மும்பை அணி தோற்கடித்ததின் மூலமாக சிஎஸ்கே அணிக்கு பெரிய உதவி செய்திருக்கிறது.

Published by