டி20 கிரிக்கெட்டில் ஹிட்மேன் படைத்த ரெக்கார்டு.. 2வது இந்திய வீரராக அபார சாதனை.. கெயிலுடன் டாப் லிஸ்டில் இணைந்தார்.. முழு விபரம்

0
525

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 41வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் இரண்டாவதாக பேட் செய்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹிட்மேன் ரோஹித் சர்மா சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் மும்பை இந்தியன்ஸ்

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது. தொடக்க வரிசை வீரர்கள் அனைவரும் விரைவாக ஆட்டமிழக்க மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஆன ஹென்றி க்ளாசன் சிறப்பான ஆட்டத்தை விளையாடி 44 பந்துகளை எதிர்கொண்டு 71 ரன்கள் குவித்தார். அதற்குப் பின் அதிகபட்சமாக அபினவ் மனோகர் 37 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது களம் இறங்கி விளையாடி வரும் நிலையில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதாவது ஒட்டுமொத்தமாக 456 டி20 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் ரோகித் சர்மா தற்போது 12000 ரன்கள் பூர்த்தி செய்து 8வது வீரராக மாறி இருக்கிறார்.

- Advertisement -

ஹிட்மேன் படைத்த மெகா சாதனை

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கடந்து சில போட்டிகளாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த நிலையில் சென்னை அணிக்கு எதிராக இதற்கு முன்னர் விளையாடிய போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து மீண்டும் பேட்டிங் பார்முக்கு வந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் சிறப்பாக விளையாடி வருவதன் மூலமாக ரோகித் இந்த சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க:கிளாசனை தூக்கி போட்டியை திருப்பிய பும்ரா.. ஐபிஎல் வரலாற்றில் 3வது ஃபாஸ்ட் பவுலராக அபார சாதனை.. ஐபிஎல் 2025

இந்த பட்டியலில் முதல் இடத்தில் யூனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிரிஸ் கெயில் 463 போட்டிகள் விளையாடி 14,562 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கிறார். இந்திய வீரர்களின் வரிசையில் கிங் விராட் கோலி 407 போட்டிகளில் விளையாடி 13208 ரன்கள் குவித்து இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது விளையாடி வரும் ரோகித் சர்மா அரை சதம் அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

- Advertisement -