213 ரன்.. மாஸ் காட்டிய எம்ஐ மகளிர்.. கேப்டன் சூறாவளி ஆட்டம்.. 47 ரன்களில் குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி

0
124

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் அரை இறுதி ஆட்டத்தில் டெல்லி அணி மும்பை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய மும்பை அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

- Advertisement -

மகளிர் ஐபிஎல் எலிமினேட்டர்

மும்பை பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதன்படி மும்பை அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக யாஷிகா பாட்டியா மற்றும் ஹார்லி மேத்யூஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதன் பாட்டியா 15 ரன்னில் வெளியேற மேத்யூஸ் தனது அதிரடியை ஆரம்பித்தார்.

இவருடன் ஜோடி சேர்ந்த மூன்றாவது வரிசை வீராங்கனை நாட் சிவியர் ப்ரன்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 71 பந்துகளில் 133 ரன்கள் குவித்தனர். மேத்யூஸ் 50 பந்துகளில் 77 ரன்கள் நாட் சிவியர் 41 பந்துகளில் 77 ரன்கள் குவிக்க, இறுதியில் மும்பை அணியின் கேப்டன் ஹெர்மன் பிரீத் கவுர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 12 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என 36 ரன்கள் குவிக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.

- Advertisement -

மும்பை அணி வெற்றி

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி குஜராத் அணி களம் இறங்கியது. குஜராத் அணி சீரான இடைவெளியில் வரிசையாக விக்கெட்டுகளை விட ஆரம்பித்தது. தொடக்க வீராங்கனை பெத் மூனி 6 ரன்னில் வெளியேற மற்றொரு வீராங்கனை டேனில் கிப்ட்சன் 34 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு குஜராத் அணியின் மூன்றாவது வரிசை வீராங்கனை ஹர்லிங் டியோல் 8 ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க:23.75 கோடி அவருக்கு செலவு செய்ய.. காரணமே இந்த விஷயம்தான்.. அதை புரிஞ்சுக்கோங்க – கேகேஆர் கேப்டன் ரகானே

அதற்குப் பின்னர் குஜராத் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் குவித்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக வெற்றி பெற்ற மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெல்லி அணியிடம் அரை இறுதியில் தோல்வி அடைந்திருந்த மும்பை அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் டெல்லி அணியை வருகிற சனிக்கிழமை எதிர்கொண்டு விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -