23.75 கோடி அவருக்கு செலவு செய்ய.. காரணமே இந்த விஷயம்தான்.. அதை புரிஞ்சுக்கோங்க – கேகேஆர் கேப்டன் ரகானே

0
68

கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஏலத்தில் கேகேஆர் அணி அவரை அதிக விலை கொடுத்து வாங்கிய நிலையில் அதற்கான காரணம் குறித்து தற்போதைய கேப்டன் ரகானே சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

வெங்கடேஷ் ஐயருக்கு அதிக விலை

கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணி அதிக வெற்றிகளை பெற்று முதல் இடத்தில் இருந்ததோடு மட்டுமல்லாமல் கம்பீரமாக இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணிக்கு அப்போது மிடில் வரிசையில் முக்கிய தூணாக வெங்கடேஷ் ஐயர் விளங்கினார்.

இந்த சூழ்நிலையில் கொல்கத்தா அணி கடந்த மெகா ஏலத்தில் அவருக்கு 23.75 கோடி ரூபாய் வரை செலவு செய்து தங்கள் அணிக்கு மீண்டும் வாங்கிக் கொண்டது. இது மக்கள் மத்தியில் பெரிய விமர்சனங்களை உண்டாக்கியது. சாதாரணமாக முக்கிய சர்வதேச வீரராக இருந்தால் அவருக்கு ஐபிஎல் அணி அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களே அதிக அளவில் விளையாடியிருக்கும் வெங்கடேஷ் ஐயருக்கு இவ்வளவு பெரிய தொகை நியாயமா என்று பல விமர்சனங்கள் இருந்தது.

- Advertisement -

கேகேஆர் கேப்டன் கருத்து

ஏனென்றால் இந்திய சர்வதேச வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் கூட கிட்டத்தட்ட வெங்கடேஷ் ஐயரின் தொகைக்கு சற்று அதிகமாக சென்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இது போன்ற விமர்சனங்களுக்கு தற்போதைய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்கியா ரகானே தகுந்த கொடுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க:ஷாருக்கான் போன்ற ஒரு முதலாளி வேண்டும்.. இதுதான் கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்லது – கேகேஆர் ஆலோசகர் பிராவோ

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” நான் உங்களுக்கு எல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வெங்கடேஷ் ஐயர் அந்த விலைக்கு நிச்சயமாக தகுதியானவர்தான். மக்கள் இதெல்லாம் பற்றி பேசுகிறார்கள், ஆனால் அவர் கொல்கத்தா அணிக்காக பல சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். எனவே அவர் அந்த விலைக்கு தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன். தயவுசெய்து அணியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வரவிருக்கும் தலைமை நிர்வாக கூட்டங்களிலோ அல்லது வேறு எங்காவது இருந்தோ இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டாம் என்று உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்”என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -