ஐபிஎல் 2024

66 ரன்.. ஹர்மன் ப்ரீத் பொறுப்பான ஆட்டம்.. மாரிசான் கேப் போராட்டம் வீண்.. WPL பைனல்.. டெல்லியை வீழ்த்தி எம்ஐ சாம்பியன்

நேற்று நடைபெற்ற மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

- Advertisement -

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணி 8 ரன்னில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

டெல்லி மும்பை பைனல்

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். யஸ்டிக்கா பாட்டியா 8 ரன் மற்றும் ஹார்லி மேத்யூஸ் 3 ரன்னில் வெளியேற அதற்குப் பிறகு நாட் சிவியர் மற்றும் கேப்டன் ஹெர்மன் பிரீத் கவுர் இருவரும் ஜோடி சேர்ந்து மும்பை அணியை மீட்டனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 62 பந்துகளில் 89 ரன்கள் குவித்தது. நாட் சிவியர் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

அதற்குப் பிறகு யாரும் மும்பை கேப்டனுக்கு கை கொடுக்கவில்லை. இறுதியில் ஹர்மன் பிரீத் கவுர் 44 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 66 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. இதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல் அணி களம் இறங்கியது.

- Advertisement -

2வது முறையாக சாம்பியன்

டெல்லி அணியின் முக்கிய வீராங்கனைகளான மெக் லேர்னிங் மற்றும் செபாலி வர்மா ஆகியோர் இந்த முறை ஜொலிக்க தவறினர். லேர்னிங் 13 ரன்னில் வெளியேற, செபாலி வர்மா 4 ரன்னில் எதிர்பாராதவிதமாக ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு ஜோனசன் 13 ரன்னில் வெளியேறினார். ஜெமிமா ஒரு முனையில் போராடினார். அவரோடு ஜோடி சேர்ந்த மரிசான் கேப் டெல்லி அணியை வெற்றிப்பாதையின் அருகில் அழைத்துச் சென்றனர். இதில் ஜெமிமா 30 ரன்னில் ஆட்டம் இழக்க, நம்பிக்கை அளித்த மரிசான் 26 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 40 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க:நான் துணை கேப்டனா.. தோனி கிட்ட இதபத்தி பேசுறப்போ.. என்னை இப்படித்தான் நினைப்பார் – விராட் கோலி சுவாரசியம்

அதற்குப் பிறகு டெல்லி அணியின் தோல்வியை யாராலும் தவிர்க்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் பிளே ஆப் ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோல்வி அடைந்திருந்த மும்பை அணி இந்த வெற்றியின் மூலமாக சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றியது. இதற்கு முன்னர் ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சீசனில் இதே டெல்லி அணியை முதல் முறை இறுதிப்போட்டியில் வீழ்த்தி, மும்பை சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by