நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் தோல்வி மற்றும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரன் பொல்லார்டு ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மிக வலுவான அணியாக கணிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து கொல்கத்தா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் தனது வெற்றி பாதைக்கு திரும்பி இருக்கிறது. பெரும்பாலான மும்பை வீரர்கள் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி இருக்கும் நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா மந்தமான முறையில் பேட்டிங் செய்து வருகிறார்.
இதுவரை விளையாடிய மூன்று போட்டியிலும் சேர்த்து ரோகித் சர்மா 21 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வரும் நிலையில், திரும்பவும் பேட்டிங் பார்முக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சில ஆண்டுகளாகவே ரோஹித் சர்மா மும்பை அணியில் தொடக்கத்தில் தடுமாறி வரும் நிலையில் அவர் குறித்து தற்போதைய மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கீரன் பொல்லார்டு ஆதரவாக சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” தனிப்பட்ட முறையில் நான் ரோகித் சர்மாவோடு அண்டர் 19 கிரிக்கெட்டில் இருந்து விளையாடி வருகிறேன். அவர் தனது சொந்த வழியில் போராடி வரலாற்றிலும் சாதனை புத்தகங்களிலும் வெவ்வேறு சூழ்நிலைகளில் விளையாட்டின் வெவ்வேறு வடிவங்களில் தனது பெயரை பொறித்துள்ளார். அவர் விளையாட்டின் ஒரு ஜாம்பவான். ஒரு தனி நபராக கிரிக்கெட்டில் நீங்கள் குறைந்த ஸ்கோர்களை பெறுவீர்கள்.
இதையும் படிங்க:எங்கள மாதிரி பிளேயர்ஸ்க்கு.. இந்த விதி பெரிய ஆபத்து.. தயவு செஞ்சு நீக்குங்க – பஞ்சாப் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்
அவர் சரியான விஷயங்களை செய்து வருகிறார். அதே நேரத்தில் கிரிக்கெட்டை ரசிக்கக்கூடிய ஒரு நபராகவும், சில சூழ்நிலைகளில் அழுத்தம் கொடுக்கப்படாதவராகவும் இருக்கிறார். எனவே ஓரிரு குறைந்த ஆட்டங்களை வைத்து நாம் மதிப்பட வேண்டாம். கிரிக்கெட்டில் நாம் வெற்றி பெறுவதை விட அதிகமாக தோல்வி அடைகிறோம் என்பது நன்றாக தெரியும். ரோகித் சர்மா மீண்டும் அதிக ஸ்கோர்கள் அடிக்கும்போது நாம் அவரை புகழ் பாடத் தொடங்குவோம்” என்று நம்புகிறேன் என பொல்லார்டு கூறியிருக்கிறார். நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை அணி லக்னோ அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறிப்பிடப்பட்டது.