ஐபிஎல் 2024

சூரியகுமார் சதம்.. ஆனா எல்லா கிரிக்கெட்டிலும் வெற்றி பெற முடியும் ஆள் இந்த பையன்தான் – பொல்லார்ட் பேச்சு

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் ஹைதராபாத் அணியை வென்றது. இந்த வெற்றிக்கு சூரிய குமாரின் அதிரடி பேட்டி முக்கிய காரணமாக இருந்தது. இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கீரன் பொல்லார்ட் பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் முதல் மூன்று விக்கெட்டுகளை சீக்கிரத்தில் இழந்த பொழுது, சூரியகுமார் மற்றும் திலக் வர்மா இருவரும் சேர்ந்து 79 பந்துகளில் 143 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூரியகுமார் 52 பந்தில் 102 ரன்கள் எடுக்க, அவருக்கு ஒத்துழைப்பு தந்த திலக் 32 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்.

இதுகுறித்து கீரன் பொல்லார்ட் பேசும் பொழுது “சூரியகுமார் நாக் அபாரமானது. அவர் உள்ளே நுழையும் பொழுது, சூழ்நிலையை புரிந்து கொண்டு சரியாக விளையாடினார். பந்து கொஞ்சம் காற்றில் நகர்வது, விளையாடுவதற்கு சிரமத்தை கொடுக்கும். சூரியகுமார் நேற்று அப்படியான பந்துகளில் ஆரம்பத்தில் சிரமப்பட்டார். ஆனால் அவர் சரியாக அதைப் புரிந்து விளையாடினார். நாங்கள் இப்படியான பேட்டிங் ஒழுக்கத்தைதான் கேட்கிறோம்.

பின்னர் அவர் பீல்டிங்கை வைத்து கேப் கண்டுபிடிப்பது மற்றும் எதிர் தாக்குதல்களை நடத்துவது என விளையாடினார். அவர் விளையாடும் முறை எங்களுக்கு ஆச்சரியமானது கிடையாது. ஏனென்றால் அவர் பயிற்சி செய்து விளையாடுகிறார். மேலும் அவர் ஸ்கோர் செய்யும் பொழுது அணி எப்படியும் வெற்றி பெறும்.

- Advertisement -

திலக் வர்மா மிகவும் திறமையான இளைஞர். அவர் எங்கள் அணிக்கு வந்த மூன்று சீசன்களாக மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். ஒவ்வொரு முறை அவர் விளையாட செல்லும் பொழுதும் அவர் வெளிப்படுத்தும் நம்பிக்கையில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். திறமையான இளைஞர்கள் தொடர்ந்து சென்று விளையாடி திறமையை நிரூபிக்க நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

இதையும் படிங்க : கடைசி 5 மேட்ச் 33 ரன்ஸ்.. ரோகித் சர்மா செய்த செயல்.. வருத்தத்தில் ரசிகர்கள்.. காரணம் என்ன?

நாங்கள் அழுத்தத்தில் இருந்தும் பொழுது கம்மின்ஸ் பந்துவீச்சுக்கு எதிராக திலக் வருமா களம் இறங்கினார். நாங்கள் அவருடைய நம்பிக்கை மற்றும் தைரியத்தை எப்பொழுதும் ஓய்வறையில் பாராட்டுகிறோம். அவர் மிகவும் திறமைசாலி. அவர் எந்த வடிவ கிரிக்கெட் விளையாடினாலும், அவரால் வெற்றி பெற முடியும்” என்று கூறியிருக்கிறார்.

Published by