கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அறிமுகவீரர் அஸ்வினி குமார் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான சாதனையை படைத்திருக்கிறார்.
மும்பை அணியின் புதிய திறமை
மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது. கடந்த போட்டியில் மும்பை அணியில் இடம் பெற்ற சத்திய நாராயண ராஜூக்கு பதிலாக பஞ்சாப் முகாலியைச் சேர்ந்த இளம் வீரர் அஸ்வினி குமார் இடம் பெற்றார். இந்த போட்டியில் பேட்டிங் துவங்கிய கொல்கத்தா அணிக்கு சுனில் நரேன் போல்ட் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேற, தொடக்க வீரர் டிகாக் ஒரு ரன்னில் தீபக்சஹார் பந்துவீச்சில் வெளியேறினார்.
அதற்குப் பின்னர் தனது முதல் போட்டியில் விளையாடும் அஸ்வினி குமார் கைகளில் ஹர்திக் பாண்டியா பந்தை கொடுக்க கொல்கத்தா கேப்டன் ரகானேவை 11 ரன்னில் வீழ்த்தி தனது முதல் விக்கட்டை கைப்பற்றினார். அதற்குப் பின்னர் அன்கிஸ் ரகுவன்சி 26 ரன், வெங்கடேஷ் ஐயர் 3 ரன்னில் ஆட்டம் இழக்க, திரும்பவும் அஸ்வின்குமார் தனது பந்துவீச்சை தொடர்ந்தார். அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ரிங்கு சிங்கை 17 ரன்னில் அஸ்வினி குமார் வீழ்த்தினார்.
அறிமுகப் போட்டியிலேயே அசத்தல்
அதற்குப் பிறகு மனிஷ் பாண்டே 19 ரன்னில் போல்ட் முறையில் அஸ்வினி குமார் வெளியேற்ற அதற்கு அடுத்ததாக களமிறங்கிய ஆன்ட்ரே ரசலை வெறும் 5 ரன்னில் ஸ்டம்ப்புகள் சிதற ஆட்டம் இழக்க செய்து வெளியேறினார். இவரது அபாரமான பந்து வீச்சின் காரணமாக கொல்கத்தா அணி 16.2 ஓவர்கள் முடிவில் 116 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் அஸ்வினி குமார் மொத்தமாக 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையும் படிங்க:6 வருஷம் ஆச்சு.. இனி அவர் ஸ்பூனில் ஊட்டி விடணும்னு அவசியம் இல்லை.. கேகேஆர் வீரர் குறித்து வருண் சக்கரவர்த்தி பேட்டி
தனது அறிமுக போட்டியிலேயே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் இருத்த அஸ்வினி குமார் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலேயே நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற அபார சாதனையை படைத்தார். தற்போது வெற்றி இலகை நோக்கி மும்பை அணி களம் இறங்கி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.






