எஞ்சியுள்ள ஒரு போட்டிக்காக வெளியேறிய சூர்யகுமார் யாதவிற்கான மாற்று வீரரை அறிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ்

0
62
Suryakumar Yadav and Rohit Sharma

இந்த ஆண்டு துவக்கத்தில் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் ஐ.பிஎல் மெகா ஏல சமயத்தில் விளையாடியது. இந்தத் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார், அடுத்து இலங்கை அணியுடன் நடக்கவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் போட்டி தொடரிலிருந்து கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறி இருந்தார்.

இந்தக் காயம் சரியாகக் குணம் ஆகாததால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் சில ஆட்டங்கள் அவரால் மும்பை இன்டியன்ஸ் அணிக்காக விளையாட முடியவில்லை. இது ஏற்கனவே ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட முடியாததால் வலிமை குன்றி இருந்த மும்பை அணியை மேலும் பலவீனம் ஆக்கியது.

- Advertisement -

மும்பை அணி முதல் எட்டு ஆட்டங்களில் தோற்று ஐ.பி.எல் தொடரில் எந்த அணிகளும் செய்யாத, மிக மோசமான சாதனையைச் செய்ததோடு, நடப்பு ஐ.பி.எல் தொடரின் பிளே-ஆப்ஸீ வாய்ப்பிலிருந்து, முதல் எட்டு ஆட்ட தோல்விகளோடு வெளியேறியும் இருந்தது. மும்பை அணியின் இந்தத் தொடர் தோல்விகள், ப்ளே-ஆப்ஸ் வாய்ப்புக்கான போட்டியை சில அணிகளுக்குள் மட்டுமே நிகழும்படி செய்துவிட்டது. தற்போது 16 புள்ளிகள் இருக்கும் அணிகள் மட்டுமே ப்ளே-ஆப்ஸ் சுற்றுக்குள் இருக்க முடியும் என்கிற நிலைதான் நிலவுகிறது. புள்ளி பட்டியலில் ஐந்தாவதாக வரும் அணியும் 16 புள்ளிகளோடு வெளியேறும் சூழலும் நிலவுகிறது. இதற்கு சென்னை அணியின் தொடர் தோல்விகளும் ஒரு காரணம்.

மும்பை இன்டியன்ஸ் அணியின் நிலையுயும், ப்ளே-ஆப்ஸ் சுற்றில் அணிகளின் நிலையும் இப்படி இருக்க, மீண்டும் சூர்யகுமார் யாதவ் கையில் ஏற்பட்ட காயத்தால் ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறி இருந்தார். இப்பொழுது இவருக்கான மாற்று வீரரை மும்பை அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. நடந்து முடிந்த ஏலத்தில் விற்கப்படாத, மும்பை அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்த, 28 வயதான உத்ரகண்ட்டின் வலக்கை வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் மத்வல்தான் அந்த வீரர். 2019 ஆண்டு உத்ரகண்ட் அணிக்காக மூன்று விதமான அறிமுகமான இவரின் பந்துவீச்சு எகானமி நன்றாகவே இருக்கிறது!