தமிழ்நாட்டுக்கு வரும் கான் பிரதர்ஸ் .. கேப்டனாக அண்ணன் சர்ப்ராஸ் கான்..  தம்பி முஷீர் கானுக்கும் வாய்ப்பு

0
214
Sarfaraz

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மும்பை மாநில அணிக்காக விளையாடும் சர்ப்ராஸ்கான் அறிமுகமாகி தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் அனைவரையும் ஈர்த்தார். தற்போது அவரை மும்பை மாநில அணிக்காக தமிழ்நாட்டில் நடைபெறும் புகழ் பெற்ற உள்நாட்டு டெஸ்ட் தொடருக்கு கேப்டன் ஆக்கி இருக்கிறார்கள்.

ஆல் இந்தியா புச்சி பாபு உள்நாட்டு டெஸ்ட் தொடர் 1909ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் நடத்துகிறது. அதே சமயத்தில் 1960 ஆம் ஆண்டு முதல் இந்த தொடரில் பங்கேற்பதற்கு வெளியில் இருந்தும் அணிகள் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்நாட்டு சீசனின் சிறந்த முதல் தொடராக இது அமைகிறது.

- Advertisement -

புச்சி பாபு நாயுடு என்று அழைக்கப்படும் மொதவரபு வெங்கட மஹிபதி நாயுடுவின் நினைவாக இந்த தொடர் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. அவர் அந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கும் உள்நாட்டு வீரர்களுக்கும் இடையே கிரிக்கெட் தொடரை நடத்த முயற்சி மேற்கொண்டார்.

இந்த நிலையில் அவர் முதல் போட்டியை நடத்துவதற்கு முன்பாகவே 1908ஆம் ஆண்டு காலமடைந்துவிட்டார். எனவே அவரது நினைவாக அவர் இறந்த அடுத்த ஆண்டிலிருந்து இந்த சிவப்பு பந்து உள்நாட்டு டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. இந்த வருடத்திற்கான இந்தத் தொடரில் மும்பை மாநில அணியும் பங்கே இருக்கிறது. இந்த மும்பை மாநில அணிக்கு சர்பராஸ் கான் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவருடைய தம்பி முஷீர் கான் மும்பை மாநில அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

மும்பை மாநில அணியின் கேப்டன் ரகானே மற்றும் நட்சத்திர வீரர் பிருத்வி ஷா இருவரும் தற்பொழுது இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் இந்த தொடரில் மும்பை மாநில அணிக்காக விளையாடவில்லை. ரகானே விளையாடுவதாக இருந்தால் அவர்தான் நிச்சயம் கேப்டனாக இருந்திருப்பார் என மும்பை மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பாட்டில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 2 போட்டி 126 ரன்.. டிஎன்பிஎல் பேட்டிங்கில் அசத்த.. ஐபிஎல் 2024ல் எடுத்த முடிவு தான் காரணம்.. அஸ்வின் பேட்டி

புச்சி பாபு டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான மும்பை மாநில அணி :

சர்ஃபராஸ் கான் (கேப்டன்), திவ்யான்ஷ் சக்சேனா, அமோக் பட்கல், அகில் ஹெர்வாட்கர், சித்தேஷ் லாட், முஷீர் கான், நுதன் கோயல், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஹர்திக் தாமோர், பிரசாத் பவார், தனுஷ் கோட்டியான், அதர்வா அன்கோலேகர், ஹிமான்ஷு சிங், தனித் துஸ்ஸௌ, சில்வஸ்டர் ரவுத் , ஜுனைத் கான் மற்றும் ஹர்ஷ் தன்னா.

- Advertisement -