இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் மோசமாக விளையாடியதை அடுத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சித் தொடரில் விளையாடினர்.
இந்த சூழ்நிலையில் மும்பை அணியின் தலைமை தேர்வாளரான சஞ்சய் பாட்டீல் சர்வதேச வீரர்கள் உள்நாட்டு தொடரில் விளையாடுது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
உள்நாட்டு தொடரில் சர்வதேச வீரர்கள்
இந்திய அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச வீரர்கள் அனைவரும் உள்நாட்டு தொடரில் விளையாட வேண்டும் என்ற கட்டளையை வைத்தது. பிசிசிஐயின் உத்தரவை அடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் உள்நாட்டு தொடரில் விளையாடினார்கள்.
இருப்பினும் அவர்கள் விளையாடிய அணிகளுக்காக பெரிய அளவில் பேட்டிங்கில் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் வருகையால் உள்நாட்டு தொடரில் விளையாடும் இளம் வீரர்களின் வாய்ப்பு பறி போனது. இந்த சூழ்நிலையில் மும்பை அணியின் தேர்வாளர் சஞ்சய் பாட்டீல் சர்வதேச வீரர்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சில வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.
பிசிசிஐ கண்காணிக்க வேண்டும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” சர்வதேச நட்சத்திரங்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை உறுதி செய்யுமாறு சங்கத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இல்லையென்றால் அது அணிக்குள் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு அநீதி இழைப்பது போல ஆகிவிடும். எங்கள் சங்கம் எப்போதும் எங்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது, ஆனால் பிசிசிஐ உத்தரவின் காரணமாக இதற்கு வேறு வழியில்லை.
இதையும் படிங்க:ஐசிசி தந்த பணத்தை என்ன பண்ணிங்க.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இது அசிங்கமானது – முகமது கைஃப் கேள்வி
சர்வதேச நட்சத்திரங்களை மாநில அணிகளுக்கு விளையாடும்மாறு கேட்கும் போதெல்லாம் அவர்களின் செயல் திறனை நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நான் இதை நான் அஜித் மற்றும் அவரது குழு பிசிசிஐக்கு வேண்டுகோளாக சொல்கிறேன். அவர்கள் விளையாடச் சொன்னார்கள் என்பதற்காக சர்வதேச வீரர்களும் விளையாடினார்கள். ஆனால் அவர்களை பிசிசிஐ கண்காணித்திருக்க வேண்டும். விளையாடினார்களே தவிர சிறப்பாக எதுவும் செயல்படவில்லை. அது அவர்களின் அணியில் செயல் திறனை பிரதிபலிக்கிறது” என்று பேசி இருக்கிறார். ரஞ்சி டிராபி தொடரில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் அய்யர் சூரியகுமார் யாதவ், சிவம் துபே ஆகியோர் விளையாடினாலும் அந்த அணிக்காக சிறப்பாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விராட் கோலி டெல்லி அணிக்காக களமிறங்கிய நிலையில் அவரும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.






