இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி டிராபியின் இறுதிப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமை தாங்கும் மத்திய பிரதேஷ் அணியை ஸ்ரேயாஸ் ஐயரின் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இன்று நடப்பு சையத் முஸ்டாக் அலி டிராபியின் இறுதிப்போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மத்திய பிரதேஷ் மற்றும் மும்பை அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தங்கள் அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார்.
தனியாக போராடிய ரஜத் பட்டிதார்
முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஹர்பித் கௌட் 3, ஹர்ஸ் கவாலி 2 ரன் எடுத்து சர்துல் தாக்கூர் வீசிய இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து வந்த சுப்ரன்ஸு சேனாபதி 23, ஹர்பிரித் சிங் 15, வெங்கடேஷ் ஐயர் 17 ரன்கள் எனத் தொடந்து வெளியேற மத்திய பிரதேஷ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதற்கு நடுவில் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது ஆக வந்த கேப்டன் ரஜத் பட்டிதார் தனி ஆளாக நின்று அதிரடியாக அரை சதம் அடித்தார். மேலும் இறுதி ஓவரின் இறுதிப் பந்து வரை களத்தில் நின்று 40 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 81 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியின் காரணமாக 20 ஓவர்களில் மத்திய பிரதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது.
சேர்ந்து விளையாடி சாம்பியன் ஆன மும்பை
இதைத்தொடர்ந்து மும்பை மணிக்கு விளையாட வந்த துவக்க ஆட்டக்காரர்கள் பிரிதிவி ஷா 6 பந்தில் 10 ரன், ரகானே 30 பந்தில் 37 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9 பந்தில் 16 ரன், சிவம் துபே 6 பந்தில் 9 ரன், சூரியகுமார் யாதவ் 32 பந்தில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
இதைத் தொடர்ந்து மும்பை அணிக்கு சிறிது நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த தொடர் முழுவதும் கலக்கும் இளம் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சூரியனாஸ் ஷெட்கே அதிரடியாக 15 பந்தில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 267 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட்டம் இழக்காமல் 35 ரன்கள் நொறுக்கி தள்ளினார்.
இதையும் படிங்க : WPL ஏலம்.. கோடியை அள்ளிய 16 வயது தமிழக வீராங்கனை.. 2வது பெரிய விலை.. யார் இந்த கமலினி?
இவரது அதிரடியால் 17.5 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இழப்பை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சையத் முஸ்டாக் அலி தொடரில் சாம்பியன் பட்டத்தை மும்பை அணி கைப்பற்றியது. சூரியனாஸ் ஷெட்கேவை மும்பை மாநில அணியின் ஹர்திக் பாண்டியா என்று அழைக்கிறார்கள். இவரை ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கி இருக்கிறது.