சரியான நேரத்தில் ரகானே செய்த சம்பவம்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி.. ரஞ்சி டிராபி பைனலில் மும்பை முன்னிலை

0
292
Rahane

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஐம்பது லட்சம் ரூபாய்க்கு ரகானே வாங்கப்பட்டார். மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுத்தது. அவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிரடியாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக விளையாடிய காரணத்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாலும், கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடுவதற்கு ரகானே தேர்வு செய்யப்பட்டார். இறுதிப் போட்டியில் இந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடிய ஒரே வீரராக இருந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து உடனே வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரகானே அதிரடியாக நீக்கப்பட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் துணை கேப்டனாக இடம் பெற்று இருந்த காரணத்தினால், அடுத்த இரண்டு வருடங்கள் இந்திய டெஸ்ட் அணியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அவரை வெளியேற்றியது.

இந்த நிலையில் நடப்பு ரஞ்சி டிராபி சீசனில் மும்பை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று வழி நடத்தி வந்தார். ஆனால் அவர் பேட்டி மிக மோசமாக இருந்தது. டக் மற்றும் கோல்டன் டக் என ரன்கள் இல்லாமல் சில இன்னிங்ஸ்களில் தொடர்ந்து வெளியேறினார். இது மும்பை மாநில கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கும் கவலையாக அமைந்தது.

இந்த நிலையில் நேற்று துவங்கி நடைபெற்று வரும் ரஞ்சித் டிராபி பைனலில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 224 ரன்கள் எடுத்த நிலையில், விதர்பா அணியை வெறும் 105 ரண்களில் சுருட்டி அசத்தியது.

- Advertisement -

இதற்கு அடுத்து 119 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் துவக்க ஆட்டக்காரர்கள் பிரிதிவி ஷா 11, பூபேன் லல்வானி 18 இருவரது விக்கட்டையும் சீக்கிரத்தில் இழந்தது. ஆனால் இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த சர்பராஸ் கான் தம்பி முசிர் கான் மற்றும் கேப்டன் ரகானே இருவரும் சேர்ந்து பொறுப்பாக விளையாடிய விக்கெட் விழாமல் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் பார்த்துக் கொண்டார்கள். தற்போது மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து 260 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

இதையும் படிங்க : “ரோகித் ஜெயஸ்வாலுக்கு இதை செஞ்சே ஆகனும்.. அந்த பையன் இன்னும் என்ன செய்வான்” – முகமது கைஃப் ரிக்வெஸ்ட்

இன்றைய போட்டி முடிவில் ரகானே 58, முசிர் கான் 51 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். இந்தப் போட்டிக்கு பிறகு ரகானே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைய இருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது கடைசி பேட்டிங் வாய்ப்பில், பேட்டிங் செய்வதற்கு கடினமான ஆடுகளத்தில் அரை சதம் அடித்திருப்பது, அவரை மீண்டும் நம்பிக்கை பெற வைத்திருக்கும். தற்பொழுது இந்த செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.