இந்தியா மேட்ச்.. பாகிஸ்தான் அணி திடீரென கொண்டு வந்த ஸ்பெஷல் பிளான்.. விறுவிறுப்பான நகர்வுகள்

0
678
Pakistan

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் சிறப்பு திட்டம் ஒன்றை அதிரடியாக கொண்டு வந்திருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எதிர்பார்க்கப்படும் பரபரப்பான போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் முதல் போட்டியில் தோல்வி அடைந்திருக்கும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கான நெருக்கடி

1996 ஆம் ஆண்டுக்கு அடுத்து ஆடவர் கிரிக்கெட் ஐசிசி தொடர் ஒன்றை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைத்திருக்கிறது. மேலும் இதன் மூலம் பாகிஸ்தான் வெளிநாடுகள் வருவதற்கான பாதுகாப்பான இடம் என்று காட்டுவதற்கு மிகச்சிறந்த வாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது.

இப்படியான நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெல்ல வேண்டிய அவசியமும் அந்த அணிக்கு இருக்கிறது. அதே சமயத்தில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருப்பதால், இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்தால் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிவிடும் என்கின்ற நெருக்கடியான நிலை காணப்படுகிறது.

- Advertisement -

பாகிஸ்தானின் சிறப்பு திட்டம்

இந்த நிலையில் நாளைய போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் முடாசர் நாசர் மென்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் பாகிஸ்தான், கென்யா மற்றும் யுஏஇ அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்திருக்கிறார். இவருக்கு துபாய் மைதானத்தின் நிலவரங்கள் மிகவும் துல்லியமாக தெரியும். இதன் காரணமாக திடீரென இவரை மென்டராக கொண்டு வந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : மற்ற வீரர்களை விட  ஒன்றரை மணி நேரம் முன்பே பயிற்சிக்கு வந்த கோலி.. எச்சரிக்கை விடுத்துள்ள மஞ்சுரேக்கர், கிளார்க்.. பாக். எதிராக சாதிப்பாரா கிங்?

பாகிஸ்தான் அணியின் இன்றைய பயிற்சியில் அந்த வீரர்கள் பெரிய ஷாட் விளையாட முயற்சி செய்தார்கள். ஆனால் பெரும்பாலும் உயரே கிளம்பிய பந்து எல்லைக்கோட்டை தாண்டவில்லை. மேலும் வழக்கமாக அவர்களுக்கு இருக்கும் பீல்டிங் தடுமாற்றங்களும் அப்படியே தொடர்ந்தது. இந்த நிலையில் ஒரே நாளில் எல்லாவற்றையும் சரி செய்ய பாகிஸ்தான் அணி போராடிக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -