சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக கருதப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.
பாகிஸ்தானை பொறுத்தவரை நாளைய ஆட்டம் வாழ்வா?சாவா? ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சிக்கு வருவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே விராட் கோலி மைதானத்திற்கு வந்து பயிற்சியை தொடங்கியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்று இருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் விராட் கோலி 38 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். தன்னுடைய முதல் ரன்னை எடுக்க விராட் கோலி 10 பந்துகளை எடுத்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலி தடுமாறினார்.
கடுமையாக போராடுகிறார்:
இந்த வீக்னசை சரி செய்வதற்காக விராட் கோலி இன்று மூன்று மணி நேரத்திற்கு முன்பே பயிற்சி செய்யவந்துள்ளார். முதலில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், “விராட் கோலி தன்னைத் தானே வருத்திக் கொள்கிறார் என நான் நினைக்கின்றேன்”.
“ஒரு விஷயத்திற்காக அவர் கடுமையாக போராடுகிறார். இதன் காரணமாகத்தான் பயிற்சி செய்ய 90 நிமிடத்திற்கு முன்பே அவர் வந்திருக்கிறார். அவரால் போட்டிக்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பு பேட்டிங் செய்ய வந்து கூட ரன்கள் அடிக்க முடியும். இதனால் அவர் மிகவும் மெனக்கெடுவதாக எனக்கு தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.
ஜாம்பவான்கள் அப்படி தான் செய்வாங்க:
இதனைத் தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க், “ஐசிசி போன்ற தொடரில் விராட் கோலி பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என நினைக்கின்றார். இதற்காக தான் அவர் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே பயிற்சி செய்யும் வந்துள்ளார். பெரிய ஜாம்பவான் வீரர்களுக்கு தங்களுடைய பேட்டிங் மீது திருப்தி இல்லை என்றால் இப்படித்தான் பயிற்சியில் மூழ்கி விடுவார்கள்”.
இதையும் படிங்க: ஹீரோவிலிருந்து, ஜீரோ ஆகிவிடுவார்.. ரிஷப் பண்ட் வாழ்க்கையை கெடுக்காதீங்க.. கம்பீருக்கு முன்னாள் வீரர் கோரிக்கை
“களத்திற்கு செல்வதற்கு முன் தமது தவறை சரி செய்ய முயற்சி செய்வார்கள். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரிலாக்ஸ் ஆக இருப்பதற்கு நேரமே கிடையாது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி களத்தில் தடுமாறியதை நாம் கண்டோம். யாருக்குத் தெரியும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்” என கிளார்க் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 16 ஒடிஐ இன்னிங்ஸ் விளையாடியுள்ள விராட் கோலி மொத்தமாக 678 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் மூன்று சதம் இரண்டு அரை சதம் அடங்கும்.